சிம்புவுக்கு ஜோடியாகும் Mr.பிரம்மாண்டத்தின் மகள்.! முதல் பட ஷூட்டிங்கே இன்னும் முடியாலையே.!

Default Image

சிலம்பரசன் அடுத்து நடிக்க உள்ள கொரோனா குமார் படத்தில் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் ஹீரோயினாக நடிக்க உள்ளாராம்.

மாநாடு படத்தின் அட்டகாசமான வெற்றிக்கு பிறகு சிம்பு மிகவும் உற்சாகமாகியுள்ளார். அடுத்தடுத்த படங்களில் வேகமாக ஒப்பந்தமாகி நடித்து வந்தார். இந்த டிசம்பர் இறுதிக்குள் வெந்து தணிந்தது காடு திரைப்பட ஷூட்டிங்கை முடிக்க திட்டமிட்டார்.

இடையில், சிம்புவுக்கு காய்ச்சல் வந்துவிட்டது. அதனால், வெந்து தணிந்தது காடு திரைப்பட ஷூட்டிங் தடைபட்டது. தற்போது தான் அவருக்கு உடல்நிலை சரியாகி மீண்டும் ஷூட்டிங்கில் கலந்துகொண்டுள்ளார். இந்த பட ஷூட்டிங்கை முடித்துவிட்டுதான் அடுத்தபட ஷூட்டிங்கிற்கு செல்ல உள்ளார் சிம்பு.

சிம்பு அடுத்ததாக, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பட இயக்குனர் கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் எனும் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடி யார் என தெரியாமல் இருந்த நிலையில், தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கொரோனா குமார் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் நடிக்க உள்ளாராம். அதிதி ஷங்கர் தற்போது கார்த்தி நடித்து வரும் விருமன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். முதல் படமே ரிலீஸ் ஆகவில்லை அதற்குள் இன்னோர் முன்னணி நடிகர் படத்தில் நாயகியாக களமிறங்கிய அதிதியை சினிமாவட்டாரம் வியந்து பார்க்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்