சாய் பல்லவி, ஐஸ்வர்யா லட்சுமி வரிசையில் அடுத்த டாக்டரானார் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர்.!

மருத்துவம் பயின்று முடித்துள்ள இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் சென்னையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், தனது பிரமாண்ட திரைப்படங்கள் மூலம் இந்திய திரையுலகையே திரும்பி பார்க்கவைத்தவர். இவருக்கு 2 மகள்கள் ஒரு மகன் உண்டு. இதில், இரண்டாவது மகள் தான் அதிதி ஷங்கர்.
இந்த அதிதி ஷங்கர், மருத்துவ படிப்பை முடித்து, அண்மையில் டாக்டர் பட்டம் பெற்றார். தமிழக சுகாதர துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் இவருக்கு பட்டத்தை வழங்கினார். இந்த புகைப்படத்தையும், தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படத்தையும் அதிதி ஷங்கர் இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.
ஏற்கனவே நடிகை சாய் பல்லவி, ஜகமே தந்திரம் பட நாயகி ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் திரையுலகில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளனர். தற்போது திரைத்துறைக்கு அடுத்த டாக்டர் நாயகி கிடைத்துள்ளார்.
அதிதி ஷங்கர் தற்போது கொம்பன் கூட்டணி கார்த்தி – இயக்குனர் முத்தையா மீண்டும் இணைந்துள்ள விருமன் படத்தில் நாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025