தனது முதல் படத்திலேயே பாடல் எழுதி பாடியுள்ள துருவ் விக்ரம்! ஆதித்யா வர்மா அப்டேட்!
சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தனது முதல் படத்தையே மிகுந்த போராட்டத்தோடு நடித்து வருகிறார். முதலில் எடுத்த படம் பல காரணங்களால் வெளியாகாமல், தற்போது இரண்டாவதாக மீண்டும் வேறு டீமை வைத்து ரீ-ஷூட் செய்து படமாக்கினர்.
இந்த படம் முழுவதும் தயாராகி விட்டது. இப்படம் செப்டம்பர் 23இல் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் ரிலீஸ் அறிவிப்பு அறிவிக்கப்படும் என எதிரிபார்க்கப்படுகிறது. இப்படத்தில் விவேக் எழுதியுள்ள ஒரு பாடலில் இடையில் ஒரு ரேப் பாடலை துருவ் விக்ரம் எழுதி அவரே அதனை பாடியும் உள்ளார். விரைவில் இந்த பாடல் வெளியாக உள்ளது.