இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு திருமணம் முடிந்தது! கலந்துகொண்டு வாழ்த்திய பிரபலங்கள்!

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை கடந்த சில மாதங்களாகவே காதலித்து வந்ததாகவும், இருவருக்கும் டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் முன்னதாக தகவல்கள் வெளியாகி கொண்டு இருந்தது. ஆனால், திருமணம் நடைபெறுவதாக வெளியான தகவல் குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
ஆனால், முன்னதாகவே வெளியான தகவலை போலவே இன்று டிசம்பர் 15-ஆம் தேதி இயக்குனர் ஆதிக் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர்களுடைய திருமணத்திற்கு நெருங்கிய சில பிரபலங்கள் மட்டுமே கலந்துகொண்டு புதுமண தம்பதிகளுக்கு தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
சைலண்டாக நடைபெறப்போகும் ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம்! வருகை தருவாரா அஜித்?
குறிப்பாக நடிகர் விஷால் திருமணத்தில் கலந்துகொண்டு ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் தன்னுடைய திருமண வாழ்த்துக்களை தெரிவித்தார். அதைப்போல மணிரத்னம், பாக்கியராஜ், பூர்ணிமா , சுஹாசினி ஆகியோரும் திருமணத்தில் கலந்துகொண்டார்கள். ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் முடிந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சினிமா பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
மேலும், தமிழ் சினிமாவில் த்ரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன், சமீபத்தில் மார்க் ஆண்டனி ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் ஆதிக் ஆதிக் ரவிச்சந்திரன் பிரபலமானவர். இவர் அடுத்ததாக நடிகர் அஜித்குமாரின் 63-வது படத்தை இயக்கவுள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.




லேட்டஸ்ட் செய்திகள்
AUSvENG : முடிஞ்சா தொட்டுப்பார்.! வெளுத்து வாங்கிய பென் டக்கெட்! ஆஸி.க்கு இமாலய இலக்கு!
February 22, 2025
காமராஜர் ஆட்சி : காங்கிரஸ் கட்சிக்குள் மோதல்? செல்வப்பெருந்தகை vs மாணிக்கம் தாகூர்!
February 22, 2025
AUS v ENG : முக்கிய வீரர்கள் இல்லாமல் வெற்றிபெறுமா ஆஸி…இங்கிலாந்துக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
February 22, 2025
அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!
February 22, 2025