‘குட் பேட் அக்லி’ டைட்டில் யார் சொன்னது தெரியுமா.? உண்மையை உடைத்த ஆதிக் ரவிச்சந்திரன்.!

ஆதிக் ரவிச்சந்திரன் பகிர்ந்த தகவல்களின் அடிப்படையில், குட் பேட் அக்லி ஒரு அதிரடி ஆக்சன் நிறைந்த பிரம்மாண்டமான படமாக உருவாகியுள்ளது.

Adhik Ravichandran about Good Bad Ugly

சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம், நடிகர் அஜித் குமார் நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்ட மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.குட் பேட் அக்லி படம் ஏப்ரல் 10ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆரம்பத்தில் பொங்கல் அன்று திட்டமிடப்பட்டிருந்த இப்படம், சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஏப்ரலுக்கு தள்ளப்பட்டது.

முதலில் ஏமாற்றமாக இருந்தாலும், டீசரை பார்த்த ரசிகர்களுக்கு இப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் ரகசியங்கள் குறித்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றிக்கு அளித்த பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

ஆதிக் ரவிச்சந்திரன் பகிர்ந்த தகவல்களின் அடிப்படையில், குட் பேட் அக்லி ஒரு அதிரடி ஆக்சன் நிறைந்து ரசிகர்களை மகிழ்விக்கும் அனைத்து அம்சங்களையும் கொண்ட பிரம்மாண்டமான படமாக உருவாகியுள்ளது என்று தெரிகிறது.  அதன்படி படத்தோட டைட்டில் பற்றி பேசுகையில், ” படத்துக்கு குட்பேட்அக்லினு டைட்டில் அஜித் சார் வச்சது. படத்துல அஜித்சார் பேரு ரெட்ட்ராகன் படம் பயங்கர மாஸா இருக்கும் அதே சமயம் எமோசனல் கனெக்ட்டும் இருக்கும் அந்த எமோசனல்தான் தான் படத்த மாஸா கொண்டுபோக வழிவகுக்கும்.

படத்துல அப்பாவுக்கும் மகனுக்கும் ஒரு பிணைப்பு ஸ்ட்ராங்கா இருக்கும். ஏப்ரல் அஜித் ரசிகர்களுக்கு விருந்துதான். ஆரம்பம், நடுப்பகுதி, இன்டர்வெல், கிளைமாக்ஸ்னு எழுதிட்டு டீமோடு உட்கார்ந்து பேசுவோம். அதுல நல்ல நல்ல விஷயங்கள் வரும்னு நம்புவேன். ஒவ்வொரு கட்டத்திலும் ‘இதில் அஜித் சார் வரும்போது எப்படி இருக்கும்’னு பேசப் பேச அடுத்தடுத்து விஷுவல் ஓடும். அதைத்தான் திரையில கொண்டுவர முயற்சி பண்ணியிருக்கோம்” என்று கூறியுள்ளார்.

இதை வைத்து பார்க்கையில், இது படத்தின் தனித்துவத்தையும், அஜித்தின் பங்களிப்பையும் எடுத்துக்காட்டுகிறது. அஜித் ஒரு நடிகராக மட்டுமல்லாமல், திரைப்படத்தில் தனது ஆர்வத்தை காட்டுவதை இது எடுத்து காட்டுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்