AK63 [file image]
இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் கடைசியாக விஷால் மற்றும் எஸ்.ஜே. சூர்யா ஆகியோரை வைத்து மார்க் ஆண்டனி திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக ரூ.100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து, அஜித்தை வைத்து அவருடைய 63-வது படத்தையும் இயக்க வாய்ப்பு கிடைத்ததாக கூறப்படுகிறது. ஆனால், அந்த வாய்ப்பு தற்போது கைவிடப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆம், ‘ஏகே 63’ படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் இயக்கவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.
அஜித் குமார் தனது 62வது படமான ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். முன்னதாக, அஜித்தின் அடுத்த படமான 63 ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாகவும், எல்ரெட் குமார் தயாரிக்க உள்ளதாகவும், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தற்போது இந்த படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க, ஆதிக் ரவிச்சந்திரனுக்கு பதிலாக தெலுங்கு இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது. மேலும் இதில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, ஒளிப்பதிவாளராக நீரவ் ஷாவும் இணைந்துள்ளார்களாம். இதுகுறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலுக்காக காத்திருப்போம்.
‘ஏகே 63’ திரைப்படத்தை தயாரிக்க களமிறங்கும் பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனம்.!
ஏகே 63 படத்தின் தயாரிப்பு மற்றும் இயக்கம் கை மாறியதற்கான காரணம் என்னெவென்றால், எல்ரெட் குமார் தயாரித்து வரும் விடுதலை படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் முடிந்துவிடும் என்றும், மார்ச் மாதம் ஏகே படத்தை தொடங்கி விடலாம் என எதிர்பார்த்தனர். அந்த திட்டம் தள்ளிப்போனதால், ஏகே 63 கைவிட்டதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையில், ஏகே 63 படத்தை தயாரிக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்நிறுவனம், தற்போது பவன் கல்யாண் நடிக்கும் ‘உஸ்தாத் பகத்சிங்’, தேஜா நடித்த ‘RT4GM’ மற்றும் ‘புஷ்பா 2’ ஆகியவற்றை தயாரித்து வெளியிட தயராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வேலை இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் இந்நிறுவனம் தயாரிக்கும் முதல் தமிழ் திரைப்படம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…