அடேங்கப்பா…பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமல் கேட்ட சம்பளம்…ஆடிப்போனா தமிழ் சினிமா.!!
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி 6 சீசன் முடிவடைந்த நிலையில், விரைவில் 7-வது சீசன் தொடங்கப்படவுள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியின் அந்த வகையில் 7-வது சீசன் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
நிகழ்ச்சி ஜூலை மாதம் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கான போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்த சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கப் போவதாக செய்திகள் வெளியாகின.
இதற்கிடையில், நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக நடிகர் கமலஹாசன் கேட்ட சம்பள விவரம் குறித்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன்படி, பிக் பாஸ் ஏழாவது நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக கமல்ஹாசன் கிட்டத்தட்ட 120 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம்.
இந்த தகவல் தமிழ் சினிமாவையே அதிர வைத்துள்ளது. ஏனென்றால் இப்போது இருக்கும் பல நடிகர்கள் தங்களுடைய படங்களில் நடிக்க சம்பளமாக 50 கோடியிலிருந்து அறுவது கோடி வர தான் கேட்டு வருகிறார்கள். ஆனால், கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவே 100 கோடிக்கு மேல் சம்பளமாக கேட்டுள்ளார்.