அடேங்கப்பா…’அரண்மனை 4′ படத்தில் நடிக்க சந்தானம், விஜய் சேதுபதிக்கு இவ்வளவு சம்பளமா..?

Default Image

அரண்மனை 4-வது பாகத்தில் நடிக்க சந்தானம் மற்றும் விஜய் சேதுபதி எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார்கள் என்பது குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

அரண்மனை 4 

Aranmanai 4
Aranmanai 4 [Image Source : Twitter]

இயக்குனர் சுந்தர் “சி காபி வித் காதல் ”  படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக அரண்மனை நான்காவது பாகத்தை இயக்கவுள்ளார். ஏற்கனவே இவரது இயக்கத்தில் வெளியான அரண்மனை 3 பாகங்களும் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளதால் சுந்தர் சி “அரண்மனை 4” படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார்.

அரண்மனை 4-ல் விஜய் சேதுபதி – சந்தானம் 

Vijay Sethupathi And Santhanam
Vijay Sethupathi And Santhanam [Image Source : Twitter]

இந்த “அரண்மனை –  4”  படத்தில் விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரத்திலும், நடிகர் சந்தானம் காமெடி கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. மேலும் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. அடுத்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

அரண்மனை 4-ல் நடிக்க விஜய் சேதுபதி – சந்தானம்  வாங்கும் சம்பளம்..? 

Santhanam Vijay Sethupathi
Santhanam Vijay Sethupathi [Image Source : Twitter]

இந்த நிலையில், “அரண்மனை –  4”  படத்தில் விஜய் சேதுபதி  மற்றும் சந்தானம் எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார்கள் என்ற தகவல் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது. அதன்படி, விஜய் சேதுபதி 15 கோடிகளும், நடிகர் சந்தானம் 8 கோடிகளும் படத்தில் நடிக்க சம்பளம் வாங்கியுள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்படுகிறது.

காமெடியனாக நடிக்கும் சந்தானம் : 

Santhanam
Santhanam [Image Source: Twitter ]

ஆரம்பகாலகட்டத்தில் காமெடியான கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து கலக்கி வந்த சந்தானம் அரண்மனை 4 படத்தில் மீண்டும் காமெடியனாக நடிக்கிறார். இது முழுக்க முழுக்க சுந்தர் சி-க்காக மட்டுமே எனவும் சொல்லப்படுகிறது. மேலும் சந்தானம் அஜித் நடிக்கவுள்ள “AK62” படத்திலும் நடிக்கவுள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்