10 வருட டேட்டிங்…நடிகை டாப்ஸிக்கு விரைவில் திருமணம்! எந்த முறைப்படி தெரியுமா?

Taapsee Pannu Boyfriend

Taapsee Pannu: நடிகை டாப்ஸி தமிழில் வெளிவந்த ஆடுகளம், ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். 36 வயதாகும் இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் கடைசியாக ‘டன்கி’ படத்தில் நடித்த நடிகை டாப்ஸி, மூன்று ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

READ MORE – சும்மா கிளப்பி விடாதீங்க! ‘கில்லி ரீ-ரீலீஸ்’ குறித்து குண்டை தூக்கிப்போட்ட தயாரிப்பாளர்.!

இந்நிலையில், தனது நீண்டநாள் காதலரும் பேட்மிண்டன் வீரரான மத்தியாஸ் போ என்பவரை டாப்ஸி திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. நடிகை டாப்ஸி மற்றும் மத்தியாஸ் போ ஆகியோர் 2013-ல் டேட்டிங் செய்ய ஆரம்பித்தனர்.

taapsee pannu boyfriend
taapsee pannu boyfriend [File Image]

READ MORE – எம்மாடி திருமணம் மட்டுமே வேண்டவே வேண்டாம்! அலறும் நடிகை ஆண்ட்ரியா!

இவர்களது திருமண கொண்டாட்டங்கள் மார்ச் மாத இறுதியில் இராஜஸ்தான் மாநிலத்திலுள்ள உதய்பூரில் நடைபெறும் என்றும், இந்த திருமணத்தில் பாலிவுட் பிரபலங்கள் யாரும் அழைக்கப்பட மாட்டார்கள் எண்வும், இரு வீட்டாரின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

READ MORE – அஜித்துடன் அதை மறக்கவே முடியாது…புகழ்ந்த சிம்ரன்! சிக்னல் கொடுத்த எஸ்.ஜே.சூர்யா.!

ஐரோப்பாவில் உள்ள டென்மார்க்கைச் சேர்ந்த மத்தியாஸ், பேட்மிண்டன் வீரராக இருந்து தற்பொழுது பேட்மிண்டன் பயிற்சியாளராக மாறியுள்ளார். 1998-ல் சர்வதேச அரங்கில் அறிமுகமான அவர், 2012 லண்டனில் நடந்த ஒலிம்பிக்கில் ஆண்கள் இரட்டையர் வெள்ளிப் பதக்கத்தையும், 2013 உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்