தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை விசித்ரா. பட வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் விசித்ரா சினிமாவை விட்டு விலகினார். பிறகு ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரீ -எண்டரி கொடுத்தார். அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து தற்போது பிக் பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்கள் தங்களுடைய வாழ்வில் நடந்த கசப்பான சம்பவங்களை பற்றி பகிர்ந்து கொன்டு வருகிறார்கள். அந்த வகையில், விசித்ரா தன்னுடைய சினிமா வாழ்வில் மறக்க முடியாத விஷயம் ஒன்றை கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் “2000-ஆம் ஆண்டு ஒரு திரைப்படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. அந்த படத்தில் நடிக்க ஆரம்பித்த போது தான் எனக்கு பிரச்சனையே தொடங்கியது.
அந்த நடிகர் கூட நடிச்சே ஆகணும்! நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் மிகப்பெரிய ஆசை!
அந்த படத்தினுடைய பெயரை நான் சொல்ல விரும்பவில்லை. படத்திற்கான படப்பிடிப்பு மலம்புழாவில் விறு விறுப்பாக நடைபெற்று கொண்டு இருந்தது. பிறகு 2001-ஆம் ஆண்டுக்கு பின் நான் சினிமாவை விட்டு காணாமல் போனேன். அதற்கு காரணம் சொல்ல என்னால் முடியவில்லை அந்த அளவுக்கு எனக்கு மன வருத்தமாக இருக்கிறது.
அதனை சொல்ல மறுத்த விசித்ரா வேறு கதை ஒன்றையும் கூறினார். இது குறித்து பேசிய அவர் ” ஒரு டாப் ஹீரோ ஒருவரின் படத்தில் நடிக்க நான் கமிட் ஆகி இருந்தேன். அப்போது அங்கு பார்டி ஒன்று நடப்பதாக என்னை ஹோட்டலுக்கு அழைத்தார்கள். அங்கு நானும் சென்றேன். பிறகு அந்த ஹீரோவை நான் நேரில் சந்தித்தேன் என்னிடம் நீங்கள் படத்தில் நடிக்கிறீர்களா? என கேட்டார்.
அதற்கு ஆமாம் நான் படத்தில் நடிக்கிறேன் என்று சொன்னேன். அதற்கு அந்த நடிகர் என்னுடைய பெயரை கூட கேட்கவில்லை உடனடியாக என்னுடைய அறைக்கு வாருங்கள் என அழைத்தார். எனக்கு ரொம்பவே அதிர்ச்சியாகிவிட்டது நான் வேகமாக என்னுடைய ரூமுக்கு சென்று தூங்கிவிட்டேன். அவர் அப்படி பேசிய அடுத்த நாளில் இருந்து எனக்கு பிரச்சனை ஏற்பட தொடங்கியது. பலரும் தண்ணி அடித்துக்கொண்டு என்னுடைய ஹோட்டல் கதவை தட்டுவார்கள். தூங்கவே ரொம்ப பயமாக இருக்கும். இதனை என்னுடைய வாழ்வில் நான் மறக்கவே மாட்டேன்” எனவும் நடிகை விசித்ரா தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது…
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் L.B. நகர் கமினேனி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்ட இதயத்தை மருத்துவ பணியாளர்கள் 13 கிலோ…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின்…
நியூ யார்க் : அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் நாள் நெருங்கிவிட்டது என்றே கூறவேண்டும். அதற்கான உறுதி…
சென்னை : தென் தமிழகத்தில் முதல் 'மினி டைடல் பார்க்'-ஐ கடந்த மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் திறந்து…