அந்த நடிகருடன் காதலா? மனம் திறந்த 96 பட நடிகை வர்ஷா பொல்லம்மா!

Published by
பால முருகன்

96 திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை வர்ஷா பொல்லம்மா. இவர் இந்த திரைப்படத்தினை தொடர்ந்து பிகில் திரைப்படத்திலும் நடித்திருந்தார். தமிழில் மட்டுமின்றி மலையாளம் தெலுங்கு மொழிகளிலும் சில படங்களில் வர்ஷா பொல்லம்மா நடித்து இருக்கிறார்.

சமீபகாலமாக பெரிதாக தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் வேறு மொழிகளில் நடிக்க சென்று இருக்கிறார். அந்த வகையில், இவர் தற்போது சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக ‘உரு பரம பைரவகோனா’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் இம்மாதம் 16ஆம் தேதி வெளியாகிறது.

இதற்கிடையில், வர்ஷா பொல்லம்மா பிரபல தெலுங்கு நடிகரான கணேஷ் என்பவரை காதலித்து வருவதாகவும், அவருடன் தற்போது டேட்டிங் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. அந்த தகவல்களுக்கு ‘உரு பரம பைரவகோனா’ படத்தின் ப்ரோமோஷன் பணிகளின் போது காதல் வதந்திக்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

இனிமே டாப் ஹீரோக்களை வச்சு தான் படம்? வேல்ஸ் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு! 

இது குறித்து பேசிய அவர் ” என்னை பற்றி தவறான சில வதந்திகள் பரவிக்கொண்டு இருக்கிறது . அப்படி பரவும் தகவல் எதுவுமே உண்மை இல்லை. எனவே வதந்திகள் எதுவும் நம்பவேண்டாம். தெலுங்கில் ஒரு புதிய திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளேன். இந்த ‘உரு பரம பைரவகோனா’ படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்தப் படத்திலும் என் கேரக்டரில் இருந்து வரும் செய்தி. பூமியின் கதாபாத்திரம் எனது நிஜ வாழ்க்கை கதாபாத்திரத்திற்கு மிகவும் நெருக்கமாக இருந்தது.  அதனால் தான் இந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். தற்போது தமிழ். தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து வருகிறேன்” எனவும் நடிகை வர்ஷா பொல்லம்மா தெரிவித்துள்ளார்.

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

12 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

12 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

12 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

13 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

13 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

13 hours ago