நடிகை த்ரிஷா படத்தில் உருவாகும் கர்ஜனை படத்தின் மாஸ் அப்டேட்!
நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவரது நடிப்பில் உருவாக்கி திரைக்கு வந்த 96 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது.
இந்நிலையில், த்ரிஷா இயக்குனர் சுந்தர் பாலு இயக்கத்தில் ‘கர்ஜனை’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில், வம்சி கிருஷ்ணா, வடிவுக்கரசி, மதுரை முத்து, ஜாங்கிரி மதுமிதா ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்நிலையில், ஆக்சன் காட்சிகள் நிறைந்த இப்படத்தின் ட்ரைலர் ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.