மன்னிப்பு கேட்டாரு நடவடிக்கை வேண்டாம்! காவல்துறை கடிதத்திற்கு நடிகை த்ரிஷா பதில்!
நடிகர் மன்சூர் அலிகான் கடந்த மாதம் த்ரிஷா பற்றி பேசிய விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், பலரும் போது போட்டியில் இப்படியா ஒரு நடிகையை பற்றி பேசுவீர்கள்? என்பது போல கேள்விகளை எழுப்பினர். லோகேஷ் கனகராஜ், சிரஞ்சீவி, கார்த்திக் சுப்புராஜ், குஷ்பூ, உள்ளிட்ட பல பிரபலங்களும் மன்சூர் அலிகான் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள்.
இதனையடுத்து, இந்த விவகாரம் பெரிதாக ஆனதால் மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில். தான் ஜாலியாகவே பேசியதாகவும், மனவருத்தம் அடைவதாகவும் மன்சூர் அலிகான் கூறியிருந்தார். ஆனால், மன்னிப்பு மட்டும் கேட்காமல் தன் மீது தவறு இல்லை என்பது போல பேசி கொண்டு இருந்தார்.
பிறகு ஒரு வழியாக கடந்த நவம்பர் 24-ஆம் தேதி மன்சூர் அலிகான் த்ர்ஷாவிடம் மன்னிப்பு கேட்டு இருந்தார். தான் பேசியது த்ரிஷாவை காயப்படுத்தி இருந்தது என்றால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருந்ததாக செய்திகள் வெளியானது. பிறகு த்ரிஷா தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் “தவறு செய்வது மனித இயல்பு, அதை மன்னிப்பதே தெய்வ பண்பு” என்று பதிவிட்டு இருந்தார்.
ஹீரோயின்களுடன் பார்ட்டி! 1000 கோடி செலவு…சிரஞ்சீவியை விமர்சித்த மன்சூர் அலிகான்!
இந்த நிலையில், இதனை தொடர்ந்து இன்று ( டிசம்பர் 1 )மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சு விவகாரத்தில் ஆயிரம் விளக்கு மகளிர் காவல்துறை த்ரிஷா தரப்பிடம் விளக்கம் கேட்டு கடிதம் ஒன்றை எழுதி இருந்தது. அவர் கூறும் விளக்கத்தை வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து தற்போது அந்த கடிதத்திற்கு த்ரிஷா பதில் அளித்துள்ளார்.
அதில் ” இந்த விவகாரத்தில் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டுவிட்டார் எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டாம்” என்று காவல்துறை அனுப்பிய கடிதத்திற்கு நடிகை த்ரிஷா பதில் அளித்துள்ளார். மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த மன்சூர் அலிகான் “நடிகை த்ரிஷாவிடம் நான் மன்னிப்பு கேட்கவில்லை. தொலைபேசியில் ‘மரணித்துவிடு’ என்று சொன்னதை ‘மன்னித்துவிடு’ என்று அவருடைய (PRO) தவறாக புரிந்துகொண்டார்” என்று கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.