சினிமா

ஜனனி பாக்க சாய் பல்லவி மாதிரி இருக்காங்களா? என்ன த்ரிஷா இப்படி சொல்லிடீங்க?

Published by
பால முருகன்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் ஜனனி.  இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கொடுத்த அழகான ரியாக்சன் அவருக்கு பல இளைஞர்கள் ரசிகர்கள் கூட்டத்தை அவருக்கு பெற்று கொடுத்தது என்றே கூறலாம். இவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சில நாட்களில் வெளியேறினாலும் கூட அவர் பல ரசிகர்களை பெற்று கொண்டார்.

அவருக்கு இந்த நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தமிழில் படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவருடைய கதாபாத்திரமும் பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது.  லியோ திரைப்படம் வெளியாகி மூன்று வாரங்கள் கடந்த நிலையில் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றி கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

தமிழ் சினிமாவின் முதல் கருப்பு ஹீரோ! ரஜினி பற்றி பேசிய கார்த்திக் சுப்புராஜ்!

இந்த திரைப்படத்தின் மூலம் ஜனனிக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் வருவதாக கூறப்படுகிறது. இதற்கு இடையில் நடிகை ஜனனி பேட்டிகளில்  கலந்து கொண்டு லியோ படத்தில்  நடித்த அனுபவம் குறித்தும் விஜய் மற்றும் திரிஷா ஆகியோர் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார். விஜய் பற்றி பேசிய ஜனனி ” விஜய் சாருடன் நடிப்பேன் என்றெல்லாம் கனவில் கூட நான் நினைத்து பார்க்கவில்லை.

லியோ படப்பிடிப்பில் அவரிடம் நான் பல விஷயங்களை கேட்டு தெரிந்துகொண்டேன். அவருடைய இன்ஸ்டாகிராம் பாலோவர்ஸ் குறித்தும் நான் கேட்டேன். நீங்கள் இன்ஸ்டாகிராமில் இணைந்தவுடன் உங்களுடைய பாலோவர்ஸ்  வேகமாக ஏறிவிட்டது என்று பேசினாராம். அதற்கு விஜய்யும் உன்னுடைய இன்ஸ்டாவை காமி என்று கேட்டு ஜனனியின் ரீல்ஸை பார்த்தாராம்.

அதைப்போல, படப்பிடிப்பில் நடிகை த்ரிஷா ஜனனியை பார்த்துவிட்டு நீ சாய் பல்லவி போல இருக்கிறாராய் என கூறினாராம். இத்தனையும் ஜனனியே பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய ஜனனி ”  நான் த்ரிஷா மேடம் கிட்ட பேச்சுக்கொண்டு இருக்கும் போது என்னிடம் நான் பிக் பாஸ் பார்ப்பேன் உன்னுடைய விளையாட்டு எல்லாம் நன்றாக இருந்தது என்று கூறினார். அதன் பிறகு என்னை பார்த்து நீ கொஞ்சம் சாய் பல்லவி மாதிரி இருக்கிறாய் என கூறினார்.

நான் அவர் சொன்னதும் நம்பவே இல்லை எனக்கு ரொம்ப வெட்கமாக வந்துவிட்டது” என ஜனனி தெரிவித்துள்ளார்.  ஜனனி சொன்னதை பார்த்த சாய் பல்லவி ரசிகர்கள் ஜனனி முகம் வேறு மாதிரி இருக்கிறது சாய் பல்லவி முகம் வேறு மாதிரி இருக்கிறது எனவும் என்ன த்ரிஷா இப்படி சொல்லிடீங்க? எனவும் கலாய்த்து வருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

ஐபிஎல் 2025: கிரிக்கெட் சிகர்களுக்கு குட் நீயூஸ் சொன்ன மெட்ரோ.! சிஎஸ்கே போட்டிக்கு இலவச பயணம்…

சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…

8 hours ago

சபாநாயகரை சந்தித்தது ஏன்? ‘இதற்காக தான் போனேன்’ – செங்கோட்டையன் பதில்.!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…

10 hours ago

ஐபிஎல் 2025 சிஎஸ்கே பிளேயிங் லெவன் இதுதான்? தோனிக்கு இடமிருக்கா?

டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…

10 hours ago

“வேளாண் பட்ஜெட் பெயரில் பொய், புரட்டு” – அண்ணாமலை கடும் விமர்சனம்.!

சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…

13 hours ago

“ஒருவித அழுத்தமான சூழல்., ஆனாலும்., ” சுனிதா வில்லியம்ஸ் மீட்பு குறித்து நாசா கருத்து!

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர்  ஜூன் மாதம் முதல் சர்வதேச…

13 hours ago

“மொழிகளைத் தாண்டி திரைப்படங்களை பார்க்க தொழில்நுட்பம் உதவியாக உள்ளது” – பவன் கல்யாணுக்கு கனிமொழி பதிலடி.!

சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…

14 hours ago