5 வருடங்களுக்கு முன் தல அஜித் தன்னிடம் பேசிய வீடியோவை வெளியிட்ட பிரபல நடிகை!
நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். அஜித்தை பொறுத்தவரையில், இவருக்கென்று தனியாக பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இதில், பிரபலமான நடிகர் மற்றும் நடிகைகள் கூட அஜித்திற்கு ரசிகராக உள்ளனர். அதேபோல், பல முன்னணி நடிகர், நடிகைகள் கூட நடிகர் அஜித்துடன் நடிக்க வேண்டும் என விரும்புவதுண்டு.
இந்நிலையில், பிரபல நடிகையான அலிஷா அப்துல்லா சமூக வலைதள பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். நடிகர் அஜித் சிறந்த பைக் ரேஸராவார். இவர் நடிகை அலிஷாவின் சூப்பர் பைக்கை வாங்கி ஓட்டி பார்த்துள்ளார்.
இதனையடுத்து, அஜித் பைக்கில் அமர்ந்து கொண்டு, ‘all the best dowell be safe’ என கூறியுள்ளார். இதனை அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.