சினிமா

விருப்பமே இல்லை பணத்துக்காக அதையெல்லாம் ஒப்புக்கொண்டேன்! தமன்னா காதலர் வேதனை!

Published by
பால முருகன்

பாலிவுட் நடிகர் விஜய் வர்மா பல படங்களில் நடித்திருந்தாலும் இவர் தமன்னாவை காதல் செய்த பிறகு தான் மிகவும் பிரபலமானார் என்றே சொல்லவேண்டும். இவரும் தமன்னாவும் கடந்த சில மாதங்களாகவே டேட்டிங் செய்து வந்த நிலையில், இருவருமே தாங்கள் இருவரும் காதலிப்பதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவித்து விட்டனர். இந்த நிலையில், இப்போது தமன்னாவின் காதலராகவும், முன்னணி நடிகராக இருக்கும் விஜய் வர்மா ஒரு காலத்தில் பணம் இல்லாமல் மிகவும் சீரமைபட்டு இருக்கிறாராம்.

இந்த தகவலை விஜய் வர்மாவே சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” ஒரு காலத்தில் எனக்கு சரியாக பட வாய்ப்புக வராத காரணத்தால் நான் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமத்தில் இருந்தேன். அந்த சமயம் எல்லாம் பணம் இல்லாமல் நான் ரொம்பவே கஷ்டப்பட்டேன். என்னுடைய வங்கிக் கணக்கில் ரூ.18 மட்டும் தான் இருந்தது.

அந்த நேரத்திலும் எனக்கு சொல்லும் படி அந்த அளவிற்கு பெரிய பெரிய படங்களில் நடிக்கும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பிறகு ஒரு படத்தில் நடிக்க எனக்கு சம்பளமாக 3,000 ரூபாய் தருவதாகச் சொன்னார்கள். ஆனால், சும்மாக நின்று கொண்டு இருக்கும் கதாபாத்திரம் தான். அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்க எல்லாம் எனக்கு விருப்பமே இல்லை.

அடடா! கங்குவா பட நடிகை திஷா பதானிக்கு இப்படி ஒரு திறமையா?

விருப்பமே இல்லை என்றாலும் அன்று நான் அந்த சூழ்நிலையில் இருந்த காரணத்தால் பணத்துக்காக ஒப்புக்கொண்டேன். இப்படி சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்ததால் சில கஷ்ட்டமான சூழ்நிலையை சந்திக்கவேண்டி இருந்தது. ஒரு சமயம் எல்லாம் கண்ணீருடன் அழுதுகொண்டு இருந்தேன் எனக்கான வாய்ப்பு எப்போது வரும் என்று. இந்த சம்பவம் 2014ல் நடந்தது. அன்று முதல் இன்று வரை பணத்தைப் பற்றிய சிந்தனையை விட்டுவிட்டேன்.

பணம் எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்து கொள்ளலாம். என்று எனக்குப் பிடித்தமான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறேன்” என தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கஷ்டமான சம்பவத்தை பற்றி பேசியுள்ளார். மேலும். நடிகர் விஜய் வர்மா தற்போது சூர்யாவின் 43வது திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

13 hours ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

13 hours ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

15 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

15 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

18 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

18 hours ago