கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினார் நடிகை தமன்னா!
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்தபாடில்லை. இந்த வைரஸ் பாதிப்பால் பாமர மக்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், சினிமா திரையுலகின் பிரபல நடிகையான தமன்னா, கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி ஐதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் குணமாகி வீடு திரும்பியுள்ளார்.
இதுகுறித்து நடிகை தமன்னா தனது இன்ஸ்டா பக்கத்தில், ‘மருத்துவர்களின் கவனிப்பால் குணமடைந்துள்ளதாகவும், அவர்களின் அறிவுரைப்படி சில நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளப்போவதாகவும், தனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.’ எனவும் பதிவிட்டுள்ளார்.