தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நடித்து வரும் நடிகை சுலக்சனா. இவர் தமிழ் சினிமாவில் காவியத் தலைவி திரைப்படம் மூலம் தன்னுடைய இரண்டு வயதில் இருந்து நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் வெளியான புதிய வாழ்கை, தூறல் நின்று போச்சு, அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை, பூம் பூம் மது, இன்று நீ நாளை நான் , ஆயிரம் நிலவே வா படங்கள் எல்லாம் பெரிய வெற்றியை பெற்று சூப்பர் ஹிட் ஆனது.
தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலுமே ஒரு காலத்தில் கோடி கட்டி பறந்த நடிகைகளில் இவரும் ஒருவர். இப்போது பட வாய்ப்புகள் இல்லாமல் அடிக்கடி பேட்டி கொடுத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவர் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சோகமான சம்பவங்கள் குறித்து பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” எனக்கு 18 வயது இருக்கும் போதே திருமணம் முடிந்துவிட்டது. நான்
பிரபல இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனின் மகன் கோபிகிருஷ்ணனை திருமணம் செய்துகொண்டேன். எங்களுக்கு மூன்று குழந்தைகள். என்னை பொறுத்தவரை என்னுடைய குணம் எந்தவொரு உறவிலும், சரியாக செட் ஆகவில்லை என்றால் சண்டையிடுவதை விட பிரிந்து செல்வது நல்லது. ஒன்றாக சண்டையிடுவதை விட நண்பர்களாக இருப்பது நல்லது.
ராஷ்மிகா மந்தனா அணிந்திருக்கும் இந்த சேலையின் விலை எவ்வளவு தெரியுமா?
அதே சமயம் நீங்கள் விவாகரத்து பெற, அந்த வலியைதாங்கிக் கொள்ள வேண்டும். அந்த தைரியம் உங்களுடைய மனதில் இருக்கவேண்டும். இப்படி விவாகரத்து செய்வதால் குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றனர். நான் 23 வயதில் விவாகரத்து பெற்றேன். அதன் பிறகு மீண்டும் திருமணம் செய்து கொள்ளும் எண்ணமே வரவில்லை. முழுவதுமாகவே நன் குழந்தைகளுக்காக மட்டுமே வாழ்ந்தேன்.
விவாகரத்து வாங்கிய சமயத்தில் எனக்கு மனம் ரொம்பவே வேதனை அடைந்தது. ரொம்பவே கண்கலங்கி அழுதுகொண்டு இருந்தேன். அந்த சமயம் என்னுடன் யாருமே இல்லை என்றும் தோணியது. பிறகு மெல்ல மெல்ல அந்த வேதனையில் இருந்து வெளியே வந்துகொண்டு இருந்தேன். பிறகு என்னுடைய குழந்தைகளை நல்ல படியாக வளர்க்கவேண்டும் என்று மட்டும் தான் என்னுடைய மனதில் எண்ணம் இருந்தது.
என்னுடைய விவகாரத்தின் போது வக்கீல் கூட கணவர் கிட்ட பணம் வேண்டும் என்று கேட்க கூறினார். ஆனால், எனக்கு அதெல்லாம் வேண்டாம் குழந்தைகளை பார்த்துக்கொள்ள எனக்கு தெரியும் என்று வேண்டாம் என கூறிவிட்டேன். பிறகு சினிமாவில் நடித்தால் நம்மளுடைய குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள முடியாது என்று யோசித்து சினிமாவை விட்டு சில ஆண்டுகள் விலகி இருந்தேன்.
பிறகு பணம் குறைய மீண்டும் சினிமாவில் நடித்தால் தான் நமது குழந்தைகளை பார்த்துக்கொள்ள முடியும் என சினிமாவில் நடிக்க வந்தேன். குழந்தைகளுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க கடுமையாக முயற்சித்தேன். அப்பா நமக்காக இப்படியும் இப்படியும் செய்திருப்பார் என்று அவர்கள் நினைக்கவே இல்லை. அந்த அளவிற்கு நான் அவர்களை நன்றாக பார்த்து கொண்டேன்” எனவும் நடிகை சுலக்சனா தெரிவித்துள்ளார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…