Simran [FILE IMAGE]
Simran : நடிகை சிம்ரன் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு அரண்மனை 4 படத்தில் பாடல் ஒன்றில் நடனம் ஆடவுள்ளார்.
90ஸ் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் நடிகை சிம்ரன் தற்போது படங்களில் முக்கியமான கதாபாத்திரங்கள் மட்டுமே நடித்துக்கொண்டு வருகிறார். அவர் ஹீரோயினாக பல படங்களில் நடித்து சில ஆண்டுகள் ஆனாலும் கூட வருடைய நடிப்பு திறமை மற்றும் நடனம் ஆடும் எனர்ஜி இன்னும் கொஞ்சம் கூட குறையவே இல்லை என்றே சொல்லலாம்.
சமீபகாலமாக சிம்ரன் நடனம் செய்து அதற்கான வீடீயோவையும் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டுக்கொண்டு வருகிறார். இருந்தாலும் சிம்ரன் ரசிகர்களுக்கு இருக்கும் கவலை என்றால் அவர் ஆல்தோட்ட பூபதி பாடலை போல் ஒரு படத்தில் பாடலுக்கு நடனம் ஆட மாட்டாரா என்று தான். அப்படி கவலைப்படும் ரசிகர்களுக்காகவே ஒரு உற்சாகமான செய்து வந்து இருக்கிறது.
அது என்ன செய்தி என்றால் சிம்ரன் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி உள்ள அரண்மனை 4 படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறாராம். இந்த பாடலில் நடிகை குஷ்பூவும் சிம்ரனுடன் இணைந்து நடனம் ஆடி இருக்கிறாராம். இவர்கள் இருவரும் ஆடி இருக்கும் இந்த பாடல் அரண்மனை 4 படம் முடிந்த பிறகு முடிவில் வருமாம்.
அரண்மனை 4 படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான ஹிப்ஹாப் ஆதி தான் இசையமைத்து இருக்கிறார். எனவே, கண்டிப்பாக அந்த பாடல் குத்துப்பாடலாக தான் இருக்கும். குத்துப்பாடலில் சிம்ரனின் நடனம் எப்படி இருக்கும் என்பதை பற்றி சொல்லியா தெரியவேண்டும்? கண்டிப்பாக அந்த பாடலை கேட்டுவிட்டு இளைஞர்கள் நடனம் ஆடாமல் இருக்கவே மாட்டார்கள். அந்த பாடல் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்துக்கொண்டும் இருக்கிறார்கள்.
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…