கிளாமர் ஒன்னும் தப்பு இல்லை! அது கூட கம்பேர் பண்ணாதீங்க- சிம்ரன்!

Published by
பால முருகன்

Simran : கிளாமர் என்பது தவறான விஷயம் இல்லை என நடிகை சிம்ரன் கூறியுள்ளார்.

சினிமாத்துறையில் பொதுவாகவே ஒரு சில நடிகைகள் கிளாமராக நடித்தாலே அந்த நடிகைகளை விமர்சிப்பது என்பது சாதாரணமான விஷயமாகிவிட்டது என்றே சொல்லலாம். பல நடிகைகளும் கிளாமர் என்பது தவறான விஷயம் இல்லை படத்திற்காக அந்த மாதிரி நடிக்கிறோம். அதுவும் ஒரு வகையான அழகு தான் என்று கூறுவது உண்டு. அப்படி தான் நடிகை சிம்ரன் கூட ஆரம்ப காலத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அந்த பேட்டியில் பேசிய சிம்ரன்” நான் ஜோடி படத்தில் கிளாமரான கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அந்த படத்தின் அடுத்த இரண்டாவது பாதியில் கதாபாத்திரத்திற்கு அதாவது நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரமாக நடித்து இருப்பேன். இந்த படத்திற்கு பிறகு நான் வேண்டும் என்றே கிளாமரான கதாபாத்திரங்களில் நடிக்காமல் இல்லை. எனக்கு வாய்ப்பு வரவில்லை எனவே நடிக்கவில்லை.

கிளாமர் ஒன்னும் தவறான விஷயம் இல்லை அது ஒன்னும் வல்கர் இல்லை. அதுவும் ஒரு வகையான அழகு தான். எனவே, இரண்டையும் சேர்த்து பேசவேண்டாம். வல்கர்  என்பது வேற கிளாமர் என்பது வேற. வல்கர் என்றால் மோசம் கிளாமர் என்றால் அழகு. எனக்கு சேலை கட்ட ரொம்பவே பிடிக்கும். என்னை கிளாமராக பார்க்க பிடிக்கவில்லை என்றால் வாலி படம் பாருங்கள், துள்ளாத மனமும் துள்ளும் பாருங்க.

இந்த படங்களில் நடித்த கதாபாத்திரங்கள் எல்லாமே எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம்” எனவும் நடிகை சிம்ரன் கூறியுள்ளார். ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக கலக்கி கொண்டு இருந்த நடிகை சிம்ரன் இப்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார். கடைசியாக ஹீரோயினாக ரஜினிகாந்திற்கு ஜோடியாக பேட்ட திரைப்படத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

‘மகா கும்பமேளாவில் குளித்தே தீருவேன்’ அடம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி!

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…

19 hours ago

திருப்பதி கோயிலில் முட்டி போட்டு நேர்த்திக் கடன் செலுத்திய நிதிஷ் ரெட்டி!

திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…

20 hours ago

ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை கிடைக்குமா? அமைச்சர் மூர்த்தி பதில்!

மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…

20 hours ago

பொங்கல் ஸ்பெஷல் : தென்மாவட்ட மக்களுக்காக சிறப்பு ரயில்களை அறிவித்த ரயில்வே!

சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…

21 hours ago

கரும்பு சாறில் பொங்கல் செய்யலாமா?. அது எப்படிங்க.?

சென்னை :கரும்புச்சாறை   வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில்  காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…

22 hours ago

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பொங்கல் வாழ்த்து கூறிய அஜித்குமார்!

சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…

23 hours ago