Simran : நான் நடனத்தை ரொம்பவே மிஸ் பண்றேன் என நடிகை சிம்ரன் கூறியுள்ளார்.
சிம்ரன் என்றாலே நம்மளுடைய நினைவுக்கு வருவது அவருடைய நடனம் தான். ஆல்தோட்ட பூபதி, தொட்டு தொட்டு சுல்தான் பாடலில் அவர் ஆடிய நடனம் எல்லாம் இன்னும் வரை பலருடைய பேவரைட்டாக இருக்கிறது. 90ஸ் காலகட்டத்தில் இளைஞர்களின் கன்னியாக வளம் வந்த நடிகைகளில் சிம்ரனும் ஒருவர்.
இப்போது வயதானாலும் கூட அவர் தொடர்ச்சியாக படங்களில் முக்கியமான கதாபாத்திரங்கள் நடித்து கொண்டு வருகிறார். இதனையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் சிம்ரன் தான் மிகவும் மிஸ் செய்யும் விஷயம் குறித்த தகவலை பேசி இருக்கிறார். இது குறித்து பேசிய நடிகை சிம்ரன் ” நான் இப்போது அதிகமாக மிஸ் செய்வது என்றால் நடனத்தை தான் மிஸ் செய்கிறேன்.
அதைப்போல ஆரம்ப காலத்தை போல இல்லாமல் இப்போது பாடல்கள் வேறு மாதிரி இருக்கிறது. ஆரம்ப காலத்தில் இருப்பது போல பாடல்கள் இப்போது நான் மிஸ் செய்கிறேன். எனக்கு பாடல்களில் நடனம் ஆடுவது மிகவும் பிடிக்கும். இப்போதெல்லாம் சோஷியல் மீடியா, ஓடிடி நிறைய வந்துவிட்டது. எனவே, நடனம் ஆடினால் நல்ல ரீச் கிடைக்கிறது. இப்போது நான் நடனம் ஆடுவதை மிஸ் செய்கிறேன்” என நடிகை சிம்ரன் வேதனையுடன் பேசியுள்ளார்.
மேலும் நடிகை சிம்ரன் தற்போது இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை 4 திரைப்படத்தில் ஒரு பாடலில் நடனம் ஆடி உள்ளார். அவர் நடனம் ஆடி இருக்கும் அந்த பாடல் படத்தின் ப்ரோமோஷன் பாடலாக இருக்கலாம் எனவும், படத்தினுடைய கடைசி காட்சியில் இடம்பெறலாம் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…