Simran : கமல்ஹாசனின் மருதநாயகம் படத்திற்கு முதலீடு செய்ய நடிகை சிம்ரன் நோ சொல்லியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை சிம்ரன் இருவரும் நடித்த படங்கள் எல்லாம் மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கிறது. இருவரும் இணைந்து நடித்த படத்தில் இவர்களுடைய கெமிஸ்ட்ரி நன்றாக இருந்த காரணத்தால் அடுத்த அடுத்தாக படங்களில் இருவரும் ஒன்றாகவும் இணைந்து நடித்து இருக்கிறார்கள். அந்த வகையில், பஞ்சதந்திரம், பம்மல் கே. சம்பந்தம், ஆகிய படங்களில் ஒன்றாக நடித்தனர்.
இப்படி கமல்ஹாசன் படத்தில் நடித்த சிம்ரனுக்கு ஒரு முறை கமல்ஹாசனின் கனவு படமான மருதநாயகம் படத்தில் கூட சேர்ந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததாம். அந்த சமயம் சிம்ரனிடம் பணம் அதிகமாக இருந்த காரணத்தால் அவரை மருதநாயகம் படத்தில் முதலீடு செய்யவும் கமல்ஹாசன் கூறினாராம். ஆனால், என்னதான் சொன்னாலும் சரி என்னால் முடியவே முடியாது என சிம்ரன் மறுத்துவிட்டாராம்.
மேலும், நடிகர் கமல்ஹாசனின் கனவு திரைப்படம் என்றால் மருதநாயகம் படம் என்று அனைவர்க்கும் தெரியும். 1997 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திரைப்படத்தை கமல்ஹாசன் இயக்கி நடிக்கவும் இருந்தார். படத்தில் அவருடன் பசுபதி, நாசர், விஷ்ணுவர்தன், அம்ரிஷ் பூரி, ஆர்.சி.சக்தி உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்கள்.
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து இருந்தார். இந்த திரைப்படம் அந்த சமயத்தில் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வந்தது. பிறகு பணம் பற்றாக்குறை காரணமாக அப்படியே படம் பாதியில் நின்றது இன்னும் தொடங்கப்படாமல் இருக்கிறது. இப்போது வரை அந்த படம் இனிமேல் எடுக்கமுடியாது என்று கமல்ஹாசனும் கூறவும் இல்லை. எனவே, கண்டிப்பாக அந்த படம் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் தொடங்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…