கவர்ச்சி என்றாலே நம்மளுடைய நினைவுக்கு வரும் ஒரு நடிகை சில்க் ஸ்மிதா தான். இவர் ஆடிய கவர்ச்சி நடனம் யாருக்கும் மறக்கவே மறக்காது என்றே கூறலாம், அப்போதிலிருந்து இப்போது இருக்கும் 2k கிட்ஸ் வரை சில்க் ஸ்மிதாவுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
தமிழ் சினிமாவின் கனவு கன்னி சில்க் ஸ்மிதா பிறந்தநாள் இன்று (2 டிசம்பர்). திரையுலகில் 20 வருடங்களில் சுமார் 450 படங்களில் நடித்து, 35 வயதிலேயே மறைந்து போன கனவு தேவதை. தனது முதல் படத்தில் (வண்டிச்சக்கரம்), சாராயம் விற்கும் பெண்ணாக ‘ஸ்மிதா’ என்ற பெயரில் நடித்ததால், ரசிகர்கள் அவரை சில்க் ஸ்மிதா என அழைக்கத் தொடங்கினர்.
இப்படி, பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்து, 80ஸ், 90ஸ்-களில் அசைக்க முடியாத நடிகையாக வலம்வந்தார். முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டிருந்த காலத்திலியே திடீரென 1996-ஆம் ஆண்டு மர்மமான முறையில் மரணமடைந்தார். கவர்ச்சியை தாண்டி நன்றாக நடிக்க தெரிந்த நடிகையை தமிழ் சினிமா இழந்துவிட்டதே என அந்த சமயமும் பல இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் வருத்தப்பட்டதும் உண்டு.
இவ்வாறு, இவரது மரணத்திற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், உண்மையான காரணம் என்னெவென்று இன்னும் யாருக்காமே தெருவில்லை. இது ஒரு பக்கம் இருக்க…இறப்பதற்கு முன்பு சில்க் ஸ்மிதாவின் பல ஆசைகள் நிறைவேறாமல் உள்ளது. அப்படி ஒன்று தான் ‘எனக்கு நடிகை சாவித்திரி மாதிரி ஆகணும்’ என்ற கனவை மனதில் வைத்திருக்கிறார்.
கடந்த 1984 ஆம் ஆண்டு அவரிடம் ஃபிலிம்பேர் இதழில் கவர்ச்சி வேடங்களில் இடம் பெறுவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளனர், அதற்கு சில்க் கூறுகையில் “எனக்கு சாவித்திரி, சுஜாதா மற்றும் சரிதா மாதிரி குணச்சித்திர நடிகையாக வேண்டும் ஆசை இருந்தது. ஆனால், எனது இரண்டாவது படமான வண்டிச் சக்கரத்தில் சில்க் என்ற கதாபாத்திரத்தில் நடித்தேன்.
திருமண உறவிலிருந்து வெளியேறுகிறேன்…திரெளபதி நடிகை ஷீலா அறிவிப்பு.!
அந்த படத்தில் எனது நடிப்பை ரசிகர்கள் விரும்பினர். எனது லட்சியம் அப்படியே இருந்தாலும், எனக்கு தொடர்ந்து கவர்ச்சி வேடங்களில் மட்டுமே நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. இருந்தாலும் நான் குணச்சித்திர நடிகையாக பெயர் எடுக்க விரும்புகிறேன். ஆனால் இதுதான் வேணும் என்று இந்த கதாபாத்திரங்களுக்கு நான் ஒருபோதும் கோரிக்கை வைக்க மாட்டேன்.
கலர் பட காஞ்சனா என்ன ஆனார் தெரியுமா? பயில்வான் ரங்கநாதன் சொன்ன தகவல்!
காரணம் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் தங்கள் படங்களை விற்க எனது திறமையை நம்பியிருந்தார்கள். இந்த ஒரு காரணத்துக்காக எனக்கு என்ன வேடங்கள் கொடுத்தாலும் நான் நடிப்பேன் என்றார். சில்க் ஸ்மிதா கூறியது போல், அவரதுகே நடனத்தை பார்க்கவும் திரையரங்கில் குவிய தொடங்கினர். இப்படி, தெலுங்கு, தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி திரைப்படத் துறைகளிலும் தனக்கென ஒரு பெயரைப் பெற்றார்.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…