Shruti Haasan : தமிழ் படங்களில் நடிக்காததற்கான காரணத்தை நடிகை ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார்.
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கலக்கி கொண்டு இருந்த நடிகைகளில் ஒருவர் ஸ்ருதிஹாசன். இவர் விஜய், அஜித், தனுஷ் என பல டாப் நடிகர்களுக்கு ஜோடியாக படங்களில் நடித்து இருக்கிறார். கடைசியாக தமிழில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான லாபம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து அவர் எந்த தமிழ் படத்திலும் நடிக்க கமிட் ஆகவில்லை.
பட வாய்ப்புகள் அவர் வரவில்லையா அல்லது தெலுங்கு பக்கம் அவர் பிசியாக இருந்ததால் தமிழ் சினிமாவில் நடிக்கவில்லையா என்ற கேள்விகளும் ஒரு பக்கம் எழுந்தது. ஏனென்றால், அந்த அளவிற்கு ஸ்ருதிஹாசன் தொடர்ச்சியாகவே சமீபகாலமாக தெலுங்கு திரைப்படங்களில் நடித்துக்கொண்டு வருகிறார்.
அதனை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜுடன் இணைந்து இனிமேல் என்ற ஆல்பம் பாடலில் நடித்து அந்த பாடலை இசையமைத்து பாடியும் இருக்கிறார். இந்த பாடலும் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையில் ஊடகம் ஒன்றிற்கு கொடுத்த பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஸ்ருதிஹாசன் தமிழ் படங்களில் நடிக்காததற்கான காரணத்தை கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய நடிகை ஸ்ருதிஹாசன் ” நான் எந்த மொழியில் எந்த நாடுகளுக்கும் நடிக்க சென்றாலும் நான் தமிழ் பொண்ணு தான். என்னுடைய வீடு சென்னை தான். ஆனால், எனக்கு தமிழ் சினிமாவில் வரும் கதைகள் எதுவும் பிடிக்கவில்லை. அதாவது நான் நடிக்கவேண்டும் என்று வரும் கதைகள் எனக்கு பிடிக்கவில்லை. பட வாய்ப்புகள் வருகிறது என்று எல்லா படத்திலும் நடிக்க கூடாது.
நான் ஒரு காதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிக்கிறேன் என்றால் அந்த கதாபாத்திரத்தை மக்களும் நன்றாக இருக்கிறது என்று சொல்லவேண்டும். எனவே நல்ல கதை வந்தால் நான் கண்டிப்பாகவே நடிப்பேன். எனக்கும் தமிழ் படங்களில் நடிக்கவேண்டும் என்பது ஆசை தான்” எனவும் ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் ஸ்ருதிஹாசன் தனக்கு வரும் கதை எல்லாம் மொக்கை என சூசகமாக சொல்வதாக கூறி வருகிறார்கள்.
சென்னை : இன்று மக்கள் பொங்கல் பண்டிகையை மக்கள் கொண்டாடி வரும் நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை…
சென்னை : தேசிய தேர்வு முகமை கடந்த ஆண்டு இறுதியில் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஏற்கனவே, மத்திய அரசு நிதி சரியாக வழங்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில்,…
சென்னை : நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…
சென்னை : தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த…
ஜப்பான் : தெற்கு ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 6.8 என்ற ரிக்டர்…