உங்களுக்கு திருமணம் எப்போது? நடிகை ஸ்ருதிஹாசன் சொன்ன பதில்!
Shruti Haasan: திருமணம் எப்போது என்ற கேள்விக்கு நடிகை ஸ்ருதிஹாசன் பதிலளித்துள்ளார்.
நடிகையாகவும், பாடகியாகவும் வளம் வந்து கொண்டு இருப்பவர் ஸ்ருதிஹாசன். இவர் கடைசியாக சலார் என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து இனிமேல் என்ற ஆல்பம் பாடலை இசையமைத்து அதில் நடித்தும் இருக்கிறார்.
அந்த பாடல் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சமீபத்தில் வெளியானது. பாடல் அருமையாக இருக்கும் நிலையில், பாடலை பார்த்துவிட்டு ரசிகர்கள் தங்களுடைய விமர்சனங்களை கூறி வருகிறார்கள். இந்த பாடலின் ப்ரோமோஷன் பணிகளும் தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தான் ஸ்ருதிஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் பேட்டிகளில் கலந்து கொண்டும் வருகிறார்கள்.
அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஸ்ருதிஹாசனிடம் திருமணம் எப்போது என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அந்த கேள்விக்கு அவரும் பதில் அளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” உண்மையில் எனக்கு திருமணமா? என்று கேட்கறீர்கள் என்று தொகுப்பாளரிடம் கேட்டார். அதற்கு தொகுப்பாளர் ஆமா என்று கூற அதற்கு ஸ்ருதிஹாசன் “எனக்கு தெரியவில்லை. எனக்கு இப்போது அதில் ஆர்வம் இல்லை” என்பது போல கூறிவிட்டார்.
எப்போதும் திருமணம் என்ற கேள்வி வந்தாலே நடிகை ஸ்ருதிஹாசன் சற்று கோபத்துடன் தான் பதில் அளித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட ஏன் நடிகைகளிடம் இந்த கேள்வியை மட்டும் கேட்கறீர்கள் வேறு கேள்வி இல்லையா என்பது போல பேசி இருந்தார். 38 வயதான ஸ்ருதிஹாசன் தற்போது சாந்தனு ஹசாரி என்பவரை காதலித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.