விக்ரம் வேதா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து அதில் நடித்து வருகிறார். அந்த வகையில், இவருடைய நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான இறுகபற்று திரைப்படம் பெரிய அளவில் விமர்சனங்களை பெற்று ஹிட் ஆனது, இந்த வெற்றிகளை தொடர்ந்து அடுத்ததாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் பல படங்களில் நடித்தும் வருகிறார்.
இதற்கிடையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் தான் போட்டிருக்கும் டாட்டூ பற்றியும் அதற்கான காரணம் பற்றியும் மனம் திறந்து பேசி இருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” எனக்கு ஒரு 18வது வயது இருக்கும் போது ஒருவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. அவருக்காக தான் டாட்டூ போட்டுக்கொண்டேன்.
லியோவில் வன்முறை காட்சிகள்! லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை செய்ய மனு!
அந்த டாட்டூ தான் பீட்டில்ஸ் மியூசிக் பிராண்ட் லோகோ. இதனை பற்றி அவர் சொல்லி தான் எனக்கு தெரியும். அந்த வயதில் காதல் என்பது ஒரு விதமான உணர்வை கொடுத்து இருந்தது. அந்த காதல் மோகத்தால் தான் டாட்டூ போட்டுக்கொண்டேன். அந்த டாட்டூக்கு வேறு எந்த அர்த்தமும் இல்லை காதல் என்று மட்டும் தான் அர்த்தம்” என கூறியுள்ளார்.
ஆனால், அவருடைய பெயர் பற்றியும் அவருடைய விவரம் பற்றியும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் தெரிவிக்கவில்லை. மேலும் இவர் தற்போது வெங்கடேஷுக்கு ஜோடியாக ‘சைந்தவா’ படத்தில் நடித்து வருகிறார். ஷைலேஷ் கோலா இயக்கியுள்ள இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…