நடிகை சோபனாவின் 53-வது பிறந்த நாள் இன்று.! குவியும் வாழ்த்துக்கள்.!
நடிகையும், பரதநாட்டியக் கலைஞருமான நடிகை சோபனா இன்று தனது 53-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சோபனா. இவர் தமிழ் , தெலுங்கு, இந்தி மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் மட்டுமே பல திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிப்பதை விட இவர் பரதநாட்டியத்தில் அதிகம் ஆர்வம் கொண்டவர்.
தன்னுடைய பரதநாட்டியக் கலைக்காக பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார். தமிழில் மருதானி, காதல் கீதம், துரைமுகம், போடா போடி, கோச்சடையான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 1990-காலகட்டத்தில் நடிகை சோபனா கே. மணிரத்தினம், பாலகிருஷ்ணன், அரவிந்தன் உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்திருக்கிறார்.
இப்போது பட வாய்ப்புள்ள இல்லாமல் இருக்கும் நடிகை சோபனா இன்று தனது 53-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மட்டும் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
மேலும், 53-வயதான நடிகை சோபனா இதுவரை யாரையும் திருமணமே செய்துகொள்ளவில்லை. திருமணம் செய்துகொள்ளாமல் கடந்த 2011ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்தார். அவரது பெயர் ஆனந்த நாராயணி சந்திரகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.