அந்த மாதிரி ரோலில் நடிக்க காத்திருக்கும் ஷிவானி ராஜசேகர்! செம தில்லு தான் உங்களுக்கு!

shivanirajashekar

தமிழ் சினிமாவில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகி ஹிட்டான நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஷிவானி ராஜசேகர். இவர் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில்  வெளியிட்டும் வருகிறார். இதற்கிடையில், இவர்  ‘கோடபொம்மாலி பிஎஸ்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த தேஜா மார்னி இயக்கியுள்ளார். இப்படம் நவம்பர் 24ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. படத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள்.

படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக தான் நடிகை ஷிவானி ராஜசேகர் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் தான் அடுத்ததாக நடிக்க ஆசைப்படும் கதாபாத்திரம் குறித்தும் பேசியுள்ளார்.

முதலில் படம் பற்றி பேசிய ஷிவானி ” படம் ரொம்பவே அருமையாக வந்திருக்கிறது. கண்டிப்பாக இந்த படம் எல்லாருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். ஸ்ரீகாந்த் மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியதை நினைத்து பெருமை படுகிறேன். ஸ்ரீகாந்த் சார் எப்போதும் படப்பிடிப்பு தளத்தில் ஜாலியாக இருப்பார். இவர்கள் மட்டுமின்றி பல பெரிய பெரிய நடிகர்களும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து பல விஷயங்களையும் கற்று கொண்டேன்” என கூறினார்.

என்னது குஷ்பு -பிரபு ரகசிய திருமணமா? பரபரப்பை கிளப்பிய பிரபலம்!

அடுத்ததாக எந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்க உங்களுக்கு ஆசை என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளித்த ஷிவானி ராஜசேகர் ” எனக்கு கவர்ச்சியான வேடங்களில் நடிக்க விருப்பம் இருக்கிறது. அதற்காக அந்த கதாபாத்திரத்தில் மட்டும் தான் நடிப்பேன் என்று எல்லாம் இல்லை. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரத்திற்கு எவ்வளவு உழைக்க முடியுமோ அதே அளவிற்கு உழைப்பேன். எனக்குப் பிடித்ததைச் செய்வதுதான் என் வேலை.

எனவே, என்னிடம் க்ளாமராக ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன். அந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பேன் அதற்காக காத்திருக்கிறேன்” எனவும் ஷிவானி தெரிவித்துள்ளார். பொதுவாகவே கிளாமர் ரோலில் நடித்தாலே அடுத்ததாக நடிக்க வரும் பட வாய்ப்புகள் அனைத்தும் அப்படியே வரும். ஆனால், அதெல்லாம் பற்றி யோசிக்காமல் தில்லாக தனக்கு அந்த மாதிரி ரோலில் நடிக்க ஆசை என்பதை ஷிவானி  வெளிப்படுத்தி இருக்கிறார்.  மேலும், இவர் தமிழில் மட்டுமின்றி பெல்லி சண்டாடி, அத்புதம், உள்ளிட்ட தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்