சினிமாவில் சமீபகாலமாக நடிகைகள் தங்களுக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் விஷயங்களை பற்றி வெளிப்படையாகவே பேசி வருகிறார்கள். அந்த வகையில், பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கும் விசித்ரா தனக்கு தெலுங்கு நடிகர் ஒருவர் டார்ச்சர் கொடுத்ததாக பேசியிருந்தார். இது பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கும் நிலையில், அடுத்ததாக அவரை தொடர்ந்து நடிகை ஷகீலா தன்னை ஒரு இயக்குனர் படுக்கைக்கு அழைத்ததாகவும் அந்த இயக்குனர் பெயரையும் வெளிப்படையாகவே போட்டுடைத்துள்ளார்.
இது குறித்து பேசிய நடிகை ஷகீலா ” விசித்ரா எனக்கு நெருங்கிய தோழி தான். நானும் அவரு சில படங்களில் கூட சேர்ந்து நடித்தோம். எந்த ஹீரோ அவரை அறைக்கு அழைத்தார்? உங்களை இண்டஸ்ட்ரியை விட்டு விலக வைத்தது யார் என்று சொன்னால் நன்றாக இருக்கும். பிக் பாஸ் வீட்டிற்குள் அனைவருடைய முன்பு அவர் இந்த விஷயத்தை சொல்கிறார்.
எனவே, என்னை பொறுத்தவரை அவருக்கு டார்ச்சர் கொடுத்த ஹீரோ யார் என்று அவருடைய பெயர் என்னவென்று சொல்லிருக்கவேண்டும். நான் இன்னும் தெலுங்கு துறையில் பணியாற்றி வருகிறேன். கடந்த காலங்களில் நானும் இங்கு பல சிரமங்களை எதிர்கொண்டேன். ஒரு கட்டத்தில் அல்லரி நரேஷின் தந்தை, மறைந்த இயக்குனர் ஈவிவி சத்யநாராயணா என்னிடம் அட்ஜஸ்ட்மெண்ட் கேட்டார்.
அதிக சம்பளம் கேட்டு கங்குவா படத்தின் வாய்ப்பை இழந்த பாகுபலி நடிகர்?
அவருடன் அட்ஜஸ்ட் செய்தால் அந்த படம் மட்டுமின்றி அடுத்ததாக மற்றோரு படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாகவும் சொன்னார்கள். நான் அவரிடமே சொன்னேன் சார் இப்ப இந்த படத்தில் நடிக்க பணம் கொடுத்திருக்காங்க. இன்னொரு பட வாய்ப்பு எனக்கு வேண்டாம். தேவை இல்லை என்று அவருடைய முகத்தை பார்த்துட்டே சொல்லிவிட்டேன்.
அவர் இப்போது உயிருடன் இல்லை. இதைப் பற்றி இப்போது தெலுங்கு சினிமா துறையினர் என்னைக் கூப்பிட்டு கேட்டால்… ஆம், என்னை அவருடைய அறைக்கு அழைத்தார். இதுதான் உண்மை..’ என்று கூறுவேன் என ஷகீலா வெளிப்படையாகவே பேசி இருக்கிறார். இவர் இப்படி வெளிப்படையாக பேசி இயக்குனரின் பெயரை கூறியுள்ளது சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், ஷகீலா சமீபத்தில் பிக் பாஸ் தெலுங்கின் 7-வது சீசனில் கலந்து கொண்டார். இரண்டு வாரங்களில் வீட்டை விட்டு வெளியேறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…