“இந்த தப்பை மட்டும் செய்யவே செய்யாதீங்க”.. நடிகை சனம் ஷெட்டியின் பரபரப்பு வீடியோ.!
சென்னை : நடிகையும், பிக்பாஸ் பிரபலமான சனம் ஷெட்டி மோசடி அழைப்பு அழைப்பு வந்ததாக பரபரப்பு வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
திரை பிரபலங்களுக்கு அடிக்கடி Scam கால், Scam லிங்க், Scam மெயில் போன்றவற்றிலிருந்து மர்ம நபர்கள் மோசடியில் ஈடுபட்டு வருவது வழக்கம். இந்த மாதிரி மோசடியில் இருந்து தப்பிக்க, பலரும் தங்களது அட்வைஸை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில், நடிகை சனம் ஷெட்டி டெலிகாம் நிறுவனத்தில் இருந்து தொடர்பு கொள்வதாக கூறி, தன்னிடம் மோசடி செய்ய முயற்சி செய்ததாக நடிகை சனம் ஷெட்டி இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள விடீயோவில் அவர் கூறியதாவது, “டெலிகாம் நிறுவனத்தில் இருந்து தொடர்பு கொள்வதாக கூறி, ஆன்லைன் மோசடி அழைப்பு வந்தது. என்னுடைய மொபைல்நம்பரில் இருந்து ஏகப்பட்ட பாலியல் மிரட்டல்கள் வந்துள்ளது என்றும், 25க்கும் அதிகமான புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்கள்.
உடனே, நானே பயந்து போய் என்ன சொல்லுறீங்க என்று கேட்டபோது, உங்களுடைய முழு தகவல்களை உடனடியாக எனக்கு தெரிவிக்காவிட்டால் உங்கள் சிம் லாக் ஆகி விடும் என்று கூறினார்கள். அப்போதுதான் எனக்கு தோணுச்சு.. சிம் வாங்கும்போதே நம்முடைய ஆதார் கார்டு உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் கொடுத்துள்ளோம், அப்போ ஏன் நம்மளுடைய விவரங்களை கேட்கிறார்கள் என்ற சந்தேகம் ஏற்பாடாக கூறிய அவர், இது மோசடி கால் என்று சுதாரித்து கொண்டார்.
இதேபோல், ஒரு மோசடி தனது நண்பருக்கு நடந்ததாக விவரித்தார். ஆனால், என்னுடைய நண்பர் அவர்கள் அனுப்பிய லிங்கை Click பண்ண அடுத்த செகண்ட் Phone -அ Hack பண்ணிட்டாங்க. இது போன்ற மோசடி நபர்களிடைம் வரும் எதையும் அணுக வேண்டாம். விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் கவனமாகே இருங்க, தேவையில்லாத எந்த லிங்க்-ஐயும் தொடாதீங்க என்று விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார்.
View this post on Instagram
கடந்த வாரம் ஹேமா கமிஷன் அறிக்கையை முன்னிலைப்படுத்தி, பேசிய இவர் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்தார். அதாவது, தமிழ் திரையுலகிலும் பெண்கள் காஸ்டிங் கவுச் போன்ற வன்முறைகளை சந்தித்து வருவதாக சனம் ஷெட்டி குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்கள் சந்தித்து பேசிய இவர், தமிழ் படங்களில் நடிக்கும் நடிகைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.