பிரேமம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மலையாள சினிமா மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. இவர் தமிழ் சினிமாவில் தனுஷிற்கு ஜோடியாக மாரி 2, சூர்யாவுக்கு ஜோடியாக என்ஜிகே ஆகிய படங்களில் நடித்திருந்தார். மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில், இவர் தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக SK21 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டு வெளியான சில தமிழ் படங்களில் சாய் பல்லவி நடிக்கும் வாய்ப்பை மறுத்து இருக்கிறார். அது என்னென்ன திரைப்படங்கள் என்பதனை விவரமாக பார்க்கலாம்.
இது என்னமா டிரஸ்? லாஸ்லியாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்!
ஒரு திரைப்படம் கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். த்ரிஷா நடித்திருந்த அந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகை சாய் பல்லவி தான். பேச்சுவார்த்தை முதலில் சாய் பல்லவியிடம் நடந்து வந்த நிலையில் சில காரணங்களால் சாய் பல்லவி நடிக்க மறுத்துவிட்டார்.
அடுத்ததாக பி வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி 2 திரைப்படத்திலும் கங்கனா ரணாவத் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கும் பேச்சுவார்த்தை சாய்பல்லவியிடம் நடைபெற்றது. ஆனால், படத்தின் கதை சரியில்லாத காரணத்தால் படத்தில் நடிக்க சாய் பல்லவி மறுத்துவிட்டார். படமும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை. லியோ, சந்திரமுகி 2 இரண்டு தமிழ் படங்களிலும் சாய் பல்லவி நடிக்க மறுத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…