தான் மகளின் புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்ட நடிகை ரேகா
நேற்று நடந்த மக்களவை தேர்தலில் மக்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
மேலும் பல சினிமா பிரபலங்களும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ரேகா.
இவர் 90-களில் நடித்த “கடலோர கவிதைகள்” , “காவலன் அவன் கோவலன்”, “புன்னகை மன்னன்” ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
சமீபத்தில் இவர் “பியார் ப்ரேமா காதல்” படத்தில் ஹரிஸ் கல்யாண் அம்மாவாக நடித்திருந்தார்.
இந்நிலையில் ரேகா தனது மகளுடன் வாக்கு பதிவு செய்து விட்டு இருவரும் சேர்ந்து எடுத்து கொண்ட செல் ஃபீ புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.