கமல் முத்தத்திற்கு எல்லாரும் காத்திருக்காங்க! எனக்கு கிடைச்சது..நடிகை ரேகா உற்சாகம்!
நடிகர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக புன்னகை மன்னன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் அந்த சமயமே மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் ஒரு காட்சியில் நடிகர் கமல்ஹாசன் நடிகை ரேகாவுக்கு உதட்டில் முத்தம் கொடுப்பார். அந்த காட்சியை படத்துடன் பார்க்கும்போது அந்த அளவுக்கு எமோஷனலாக இருக்கும்.
ஆனால், இந்த மாதிரி காட்சிகள் இருப்பது தனக்கு தெரியாது எனவும், திடீரென கமலே தனக்கு முத்தம் கொடுத்ததாக நடிகை ரேகாவே பல பேட்டிகளில் தெரிவித்து இருப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால், சமீபத்திய பேட்டி ஒன்றில் கமல் முத்தத்திற்கு பலரும் காத்திருக்கிறார்கள். எனக்கு கிடைச்சும் நான் ஆதங்கத்துடன் பேசி வருகிறேன்” என்பது போல கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” புன்னகை மன்னன் திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்த காலத்தில் என்னுடைய வயது மிகவும் சிறியது அந்த சமயம் எல்லாம் எனக்கு சினிமாவை பற்றி பெரிய அளவுக்கு எதுவும் தெரியாது. அதாவது முத்த காட்சியில் இப்படி ரசித்து நடிக்கவேண்டும் என்று எல்லாம் தெரியாது. புன்னகை மன்னன் படத்தில் முத்தக்காட்சியில் நடித்தவுடன் எனக்கு மிகவும் பயமாக இருந்தது.
மக்களை தொடாமல் வணக்கம் போட்ட கமல்! வீடியோவை கொண்டு வந்து விமர்சித்த ப்ளூ சட்டை!
அதற்கு காரணம் என்னுடைய அப்பா தான் என்னுடைய அப்பாவுக்கு நான் இந்த மாதிரி ஒரு காட்சியில் நடித்தேன் என்று தெரிந்தால் அவ்வளவு தான் என்று படக்குழுவிடம் கூறினேன் . பிறகு சென்சார் போது கட் செய்துவிடுவோம் என்று சொன்னார்கள். ஆனால், கட் செய்யவில்லை. கமல் சாருடைய முத்தம் வேண்டும் என்று நிறைய பேர் காத்திருக்கிறார்கள்.
ஆனால், எனக்கு அவருடைய முத்தம் கிடைச்சுட்டும் அதனால் ஆதங்க பட்டுவிட்டு அதனை பற்றிய ஒரு புகாராக பேசிக்கொண்டு அதைப்பற்றியே நேர்காணலில் பேசி வருகிறேன். இதனாலே அவருடன் சில படங்களில் நடிக்கும் வாய்ப்பும் எனக்கு வராமலே போய்விட்டதாக நான் நினைக்கிறன். நான் கமல் சாரிடம் பட வாய்ப்புகளை கேட்டு இருக்கிறேன்.
குறிப்பாக பஞ்ச தந்திரம் போன்ற படங்கள் எல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும். எனவே, அவரிடம் சார் நீங்கள் இந்த மாதிரி ஒரு படம் செய்தால் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டிருக்கிறேன். அந்த மாதிரி ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நான் நிச்சியமாக நடிப்பேன்” என சந்தோஷத்துடன் ரேகா பேசியுள்ளார். மேலும், ஒரு காலகட்டத்தில் ஹீரோயினாக கலக்கி வந்த ரேகா சமீபகாலமாக முக்கியமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.