வாரிசு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மந்தனா பல படங்களில் நடிக்க கமிட் ஆகி நடித்து வருகிறார். குறிப்பாக அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா 2 மற்றும் ரன்பீர்கபூருக்கு ஜோடியாக அனிமல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இதில் அவர் நடித்து வரும் அனிமல் படத்தின் நீ வாடி என்ற பாடல் கூட வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று இருந்தது.
அந்த பாடலில் நடிகை ராஷ்மிகா மந்தனா பல முறை லிப் லாக்காட்சியில் நடித்து வந்தது தெரிய வந்தது. இதனை பார்த்த பலரும் பாடலிலே இவ்வளவு முத்தக்காட்சியா? எனவும் கேள்வி எழுப்பி வந்தார்கள். இந்த அனிமல் திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகவிருக்கும் நிலையில், அவர் அடுத்ததாக நடிக்கவுள்ள படத்தின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
பாட்டுலே இத்தனை முத்த காட்சிகளா? அந்த மாதிரி சீனில் அசால்ட்டாக நடித்த ராஷ்மிகா!
அதன்படி, ராஷ்மிகா மந்தனா அடுத்ததாக “யார் லா சொவ்” படத்தை இயக்கிய பிரபல இயக்குனரான ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘The Girlfriend’ என்ற திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறது. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பும் போய்க்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தை வித்யா கோப்பினிடி மற்றும் தீரஜ் மொகிலினேனி ஆகியோர் தயாரிக்கிறார்கள்.
இந்த ‘The Girlfriend’ படத்திற்கான ப்ரோமோ ஒன்றும் வெளியாகி இருக்கிறது. ப்ரோமவில் சிரித்துக்கொண்டே நடிகை ராஷ்மிகா மந்தனா நடுக்கடலில் தன்னுடைய மூச்சை அடைத்துக்கொண்டு இருக்கிறார். அத்துடன் ஒரு குரலும் வருகிறது. அதில் ” நான் அவளை மிகவும் நேசிக்கிறேன், அவளுக்கு நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது வேறு யாரும் தேவையில்லை. அவளுக்குத் தேவையானது நான்தான்.
அவள் 24 மணி நேரமும் என்னுடன் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என வருகிறது. பிறகு மூச்சு விடமுடியாமல் ராஷ்மிகா மந்தனா மயங்குகிறார் அத்துடன் ப்ரோமோவும் முடிவடைகிறது. இதனை பார்த்தவுடனே படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது. மேலும், ராஷ்மிகா மந்தனா அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படம் அடுத்த ஆண்டு (2024) ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…