நடிகை ராஷ்மிகாவின் Deep fake வீடியோ – 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Rashmika Mandanna

ராஷ்மிகாவின் போலி வீடியோ விவகாரத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், 5 பிரிவுகளின் கீழ், டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நடிகை ராஷ்மிகாவின் முகத்தை வேறொரு பெண்ணுடைய முகத்தில் வைத்து மார்பீங் செய்த வீடியோ ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு திரையுலகினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நடிகை ராஷ்மிகா வேதனையுடன் இனிமேல் இது போன்று யாருக்கும் நடக்கவே கூடாது தொழில் நுட்பம் மிகவும் ஆபத்தமாக மாறி வருகிறது என்று தெரிவித்திருந்தார்.

மேலும், ராஷ்மிகா குறித்து இப்படியான போலி வீடியோவை எடிட் செய்தவர்கள் யார் என்று கண்டுபிடித்து அவருக்கு தக்க நடவடிக்கை கொடுக்க வேண்டும் எனவும் அமிதாப்பச்சன், கீர்த்தி சுரேஷ், மஞ்சிமா மோகன், நாகசைத்னயா உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்திருந்தார்கள்.

ராஷ்மிகாவை தொடர்ந்து புகைப்பட சர்ச்சையில் சிக்கிய பிரபல பாலிவுட் நடிகை!

மகளிர் ஆணையம் நோட்டீஸ்

இந்த நிலையில், ராஷ்மிகாவின் போலி வீடியோ விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று டெல்லி காவல்துறைக்கு மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ராஷ்மிகாவின் போலி வீடியோ விவகாரத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை, இந்த மாதிரி போலி வீடியோவை வெளியிட்டவர் மீது நிச்சியமாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், உடனடியாக இந்த விவகாரத்தை பற்றி டெல்லி காவல்துறையினர் விசாரணையை நடத்தவேண்டும் என்றும் நவம்பர் 17 ஆம் தேதிக்குள் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் விவரங்களுடன் எஃப்ஐஆர் நகலை வழங்குமாறும் டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் காவல்துறைக்கு கோரிக்கை வைத்து நோட்டிஸ் அனுப்பியது.

ராஷ்மிகாவின் போலி வீடியோ விவகாரம்: காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பிய டெல்லி மகளிர் ஆணையம்!

வழக்கு பதிவு

நேற்றைய தினம், டெல்லி காவல்துறைக்கு மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பிய நிலையில், Deep fake தொழில்நுட்பம் மூலம் ஆபாசமாக சித்தரித்தது தொடர்பாக, 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த விவகாரம் குறித்து டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் குற்றவாளி யாரென கண்டறிந்து அவருக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3 ஆண்டுகள் சிறை

முன்னதாக, ராஷ்மிகா மந்தனா குறித்த இப்படி தவறான மார்பீங் செய்யப்பட்ட வீடியோ வெளியாகி சர்ச்சையான நிலையில், மத்திய அரசு நடவடிக்கை எடுத்து. அதன்படி, இனிமேல் இதுபோன்ற போலியான வீடியோக்களை வெளியீட்டால் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்