Rakul : திருமணத்திற்குப் பிறகு வித்தியாசமாக உடைகள் அணியுமாறு குடும்பத்தினரிடம் அறிவுறுத்தல் வந்ததா என்ற கேள்விக்கு நடிகை ரகுல் ப்ரீத் சிங் கூலாக பதிலளித்தார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் பிரபல நடிகையான ரகுல் ப்ரீத் சிங்குக்கும், இந்தி நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ஜாக்கி பாக்னானிக்கும் கடந்த மாதம் 21ம் தேதி கோவாவில் உள்ள ஐடிசி கிராண்ட் ரிசார்ட்டில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.
இருவரும் காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்துகொண்டனர். இந்த சூழலில் நடிகை ரகுல் ப்ரீத் சிங், சமீபத்தில் நடைபெற்ற தனியார் நிறுவன (Lakme Fashion Week 2024) ஃபேஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது வித்தியாசமான ஆடைகள் அணிந்து ராம் வாக் செய்து நிகழ்ச்சியை அலங்கரித்தார்.
இந்த நிகழ்வின்போது பிரபல ஊடக ஒன்றுக்கு ரகுல் ப்ரீத் சிங் நேர்காணல் கொடுத்தார். அப்போது, திருமணத்திற்கு பிறகு வித்தியாசமான உடைகளை அணியுமாறு, உங்கள் குடும்பத்தினர் அறிவுறுத்தினார்களா என்று ரகுலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது, “அப்படி எல்லாம் எதுவுமே இல்லை.
இந்திய சமூகத்தில் நாம் திருமணத்தில் ஒரு ஒப்பந்தம் செய்கிறோம் என்று நான் நினைக்கிறேன், இது எல்லாரது வாழ்க்கையிலும் இயல்பான ஒரூ விஷயம் தான். திருமணத்திற்குப் பிறகு ஒரு பையனை இது போல குறிப்பிட்ட உடை தான் அணிய வேண்டும் என்று சொல்வீர்களா ? இல்லை, சரியா ?. இப்போது, காலம் மாறிவிட்டது ஒவ்வொருவரும் தங்களுக்கு விருப்பமானதை செய்ய தொடங்கிவிட்டனர். அதன் படி பார்க்கையில் எனது இரண்டு குடும்பங்களாலும் நான் மிகவும் ஆசீர்வதிக்கபட்டவள்.” என்று பிரபல ஊடகத்திற்கு நேர்காணலில் அவர் கூறி இருந்தார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…