நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு திருமணம் முடிந்ததா..? உண்மை தகவல் இதோ..!
நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடிகரும், தயாரிப்பாளருமான ஜாக்கி பாக்னானியயை காதலிப்பதாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கடந்த 2021-ஆம் ஆண்டு அறிவித்து தனது காதலரை அறிமுகப்படுத்தினார். அதனை தொடர்ந்து எங்கு சுற்றுலா சென்றாலும், ரகுல் ப்ரீத் சிங் தனது காதலர் ஜாக்கி பாக்னானியுடன் தான் செல்கிறார்.
இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களும், வீடியோக்களும் கூட அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வைரலாகி விடும். இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது நீண்ட கால காதலர் ஜாக்கி பாக்னானியை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் பரவி வருகிறது.
இதனையடுத்து, சமீபத்திய பேட்டி ஒன்றில் திருமணம் குறித்து பரவிய வதந்தி தகவலுக்கு ரகுல் ப்ரீத் சிங் விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” எனக்கு திருமணம் முடிந்துவிட்டதாக சிலர் கூறுகின்றனர் ஆனால், எனக்கு திருமணம் எல்லாம் முடியவில்லை. நாங்கள் இருவரும் தற்போது எங்களுடைய வேளையில் பிஸியாக இருக்கிறோம். எனவே அதை தவிர எந்த எண்ணமும் எங்களுக்கு இல்லை” என்று கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
மேலும் நடிகை, ரகுல் ப்ரீத் சிங் தற்போது தமிழில் சிவகார்த்திகேயனின் “அயலான்” படத்தில் அவருக்கு ஜோடியாகவும், கமல்ஹாசனின் “இந்தியன் 2” திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.