Raashii Khanna : அந்த மாதிரி படத்தில் நடிக்க ஆசை என நடிகை ராஷி கண்ணா தெரிவித்துள்ளார்.
சினிமாவில் இருக்கும் எல்லா நடிகைகளுக்கும் ஒவ்வொரு கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க விரும்புவது உண்டு. ஒரு சில நடிகைகள் சைக்கோ த்ரில்லர் படங்களில் நடிக்க விரும்புவது உண்டு ஒரு சிலர் சாகச காட்சிகள் கொண்ட படங்களில் நடிக்க விருப்பப்படுவது உண்டு. ஒரு சில நடிகைகள் பாகுபலி போன்ற கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க ஆசைப்படுவது உண்டு. இதனை அந்த நடிகைகளே தெரிவிப்பதையும் நீங்கள் பார்த்து இருப்பீர்கள்.
அந்த வகையில், சமீபத்தில் நடிகை ராஷி கண்ணாவும் தனக்கு எந்த மாதிரி கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்கவேண்டும் என்பது குறித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” பொதுவாகவே நடிக்க பல படங்களில் இருந்து வாய்ப்பு வருகிறது. ஆனால், நம்மளுடைய கதாபாத்திரம் எந்த அளவிற்கு பேசப்படக்கூடிய வகையில் இருக்கவேண்டுமோ அதே அளவிற்கு அருமையான கதாபாத்திரத்தை மட்டும் தான் தேர்வு செய்து நடிக்கவேண்டும்.
எனக்கு இந்த கதை தான் பிடிக்கும் அந்த கதை தான் பிடிக்கும் என்று ஒன்றும் இல்லை என்னை பொறுத்தவரை கதை நன்றாக இருக்கவேண்டும். தனிப்பட்ட முறையில் நான் நடிக்க ஆசைப்படும் கதாபாத்திரம் வரலாற்று கதைகளை வைத்து உருவாகும் படங்களில் நடிக்கவேண்டும் என்று தான். பாகுபலி போன்ற படங்கள் உருவாகி அது போல ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு வந்தால் அந்த கதாபாத்திரத்தில் நான் நடிக்க காத்து இருக்கிறேன்.
நான் இப்போது அரண்மனை 4 திரைப்படத்தில் நடித்திருக்கிறேன். இந்த திரைப்படம் கண்டிப்பாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும். படத்தில் எனக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் கதாபாத்திரமும் நன்றாக இருக்கிறது நானும் நன்றாக நடித்து இருக்கிறேன். கண்டிப்பாக இந்த படத்தின் மூலம் எனக்கு நல்ல பெயர் கிடைக்கும்” எனவும் ராஷி கண்ணா தெரிவித்துள்ளார். மேலும் அரண்மனை 4 படம் ஏப்ரல் மாதம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தேசிய தேர்வு முகமை கடந்த ஆண்டு இறுதியில் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஏற்கனவே, மத்திய அரசு நிதி சரியாக வழங்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில்,…
சென்னை : நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…
சென்னை : தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த…
ஜப்பான் : தெற்கு ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 6.8 என்ற ரிக்டர்…
நியூ யார்க : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்க போகிறார். அந்த…