பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டேவுக்கு வந்த கனவு! ரொம்ப பெருசா இருக்கே!
முகமூடி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் இந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் பெரிய அளவில் பட வாய்ப்புகள் வராத காரணத்தால் அப்டியே தெலுங்கு சினிமா பக்கம் சென்றுவிட்டார் என்றே கூறலாம். தெலுங்கில் இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் குவிந்த காரணத்தால் முன்னணி நடிகையாகவே மாறிவிட்டார்.
பிறகு நீண்ட ஆண்டுகளுக்கு பின் தமிழ் சினிமாவில் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. படமும் ஓரளவு வெற்றியை பெற்று இருந்தது. இருப்பினும் அந்த படத்திற்கு பிறகு பூஜா ஹெக்டேவுக்கு தமிழில் பட வாய்ப்புகள் வரவில்லை என்றே சொல்லலாம். இதனையடுத்து, அவர் தற்போது தெலுங்கு சினிமாவில் படங்களில் நடித்து வருகிறார்.
Read More கோடி ரூபா கொடுத்தாலும் அதை மட்டும் பண்ணவே மாட்டேன்! ஜெயம் ரவி பிடிவாதம்!
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை பூஜா ஹெக்டேதனக்கு வந்த மிகப்பெரிய கனவு ஒன்றை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” எனக்கு இப்போதெல்லாம் அடிக்கடி கனவுகள் வந்து கொண்டு இருக்கிறது. எனது கனவுகள் அடிக்கடி இல்லாவிட்டாலும் எப்போதாவது ஒரு சில சமயங்களில் நிஜமாகுவது உண்டு.
ஆனால் ஒரே ஒரு கனவு மட்டும் நினைவேற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அது என்ன கனவு என்றால் நான் சமீபத்தில் தேசிய விருது வாங்குவது போல கண்ட கனவு தான். இந்த கன வும் நிஜமாகும் என நம்புகிறேன்.இந்த கனவு பற்றி என்னுடைய நெருங்கிய நண்பரான பாலிவுட் ஹீரோ கார்த்திக் ஆர்யனிடம் கூறினேன். உன் கனவு பலிக்காது என்று என்னை கலாய்த்தார்” எனவும் பூஜா ஹெக்டே கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ரொம்ப பெரிய கனவா இருக்கே என கூறிவருகிறார்கள்.