மீண்டும் பழைய பார்முலாவை கையில் எடுக்கும் நயன்தாரா?
நடிகை நயன்தாரா நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் இருந்து தன்னுடைய கதாபாத்திரத்திற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் இருக்கிறதோ அந்த மாதிரி படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அதன் பிறகு முன்னணி நடிகையாக வளர்ந்த பின் ஹீரோயின்களுக்கு முக்கிய துவம் இருக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இடையில் சில படங்களில் ஹீரோயினாக நடித்தாலும் ஆரம்ப காலத்தில் நடித்தது போல இல்லாமல் சமீபகாலமாக இரண்டு ஹீரோயின்கள் இருக்கும் படங்களில் நடித்தார். குறிப்பாக காத்து வாக்குல ரெண்டு காதல், ஜாவான் ஆகிய படங்களை சொல்லலாம்.
திருமணம் முடிந்து 2 மாதத்தில் விசேஷம்! அமலா பால் வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி!
இந்த நிலையில், நடிகை நயன்தாரா மீண்டும் பழையபடி ஹீரோயினாக ஒரு படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறாராம். நயன்தாரா கடைசியாக அன்னபூரணி படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. ஓடிடியில் கூட சமீபத்தில் வெளியாகி இருந்தது.
அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை நயன்தாரா அடுத்ததாக இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார். விரைவில் இந்த திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
அந்த திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு நடிகை நயன்தாரா முழுவதுமாக ஒரு திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகி இருக்கிறாராம். மீண்டும் நயன்தாரா ஹீரோயினாக ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் அந்த படத்திற்காக ஆவலுடன் காத்துள்ளனர்.