20 கோடியை இழந்த நடிகை நயன்தாரா.! வெளியான அதிர்ச்சி தகவல்.!

Default Image

நடிகை நயன்தாரா தற்போது திருமணம் முடிந்ததை தொடர்ந்தும் நடிப்பை நிறுத்தாமல் தொடர்ந்து படங்களில் நடித்தும் புது படங்களில் நடிக்க கமிட் ஆகியும் வருகிறார். இதற்கிடையில், அவர் 2 பெரிய படங்களில் நடிக்கும் வாய்ப்பையும், 20 கோடி பணத்தை இழந்ததாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.

Nayanthara
Nayanthara [Image Source : Google]

அதன்படி, நயன்தாராவிடம் பெரிய தயாரிப்பாளர் ஒருவர் 1 படத்திற்கு 10 கோடி சம்பளம் என்ற கணக்கில் 20 கோடி சம்பளம் பேசி 2 படங்களில் அவர் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளாராம். அதற்கு நயன்தாராவும் முதலில் சம்மதம் தெரிவித்துள்ளாராம். எனவே, 2 படங்களில் நடிப்பதற்காக நயன்தாராவுக்கு அந்த தயாரிப்பாளர் 20 சம்பளம் கொடுத்துள்ளாராம்.

Nayanthara Sad
Nayanthara Sad [Image Source: Twitter ]

பிறகு, நயன்தாராவால் அந்த படப்பிடிப்பில் குறித்த நேரத்தில் கலந்துகொள்ள முடியவில்லையாம். இதனால் தயாரிப்பு நிறுவனம் நயன்தாராவை படத்திலிருந்து நீக்கியதுமட்டுமின்றி, சம்பளத்தையும் திரும்ப பெற்றதாம். இதனால் நயன்தாராவும் சற்று அப்செட்டில் இருப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்படுகிறது.

Nayanthara
Nayanthara [Image Source : Twitter]

மேலும், நடிகை நயன்தாரா தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வரும் ஜூன் 2-ஆம் தேதி தமிழ், தெலுங்கு,ஹிந்தி,கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்