மாதவன் பேமிலியுடன் ஜாலியான ட்ரிப்… துபாயில் புத்தாண்டு கொண்டாடிய நயன் – விக்கி!
துபாயில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மாதவன் அவரது மனைவி புத்தாண்டை வரவேற்று கொண்டாடினர்.
துபாய்: விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் அடிக்கடி வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள். மேலும் அவர்களது விடுமுறை நாட்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வாழக்கமாக வைத்துள்ளனர்.
தற்பொழுது, இருவரும் தங்கள் துபாய் பயணத்தின் ஒரு பகுதியாக புத்தாண்டை கொண்டாடி தீர்த்துள்ளனர். அதில் சிறப்பு என்னவென்றால், அங்கு அவருடன் நடிகர் மாதவன் மற்றும் அவரது மனைவி சரிதா பிர்ஜே ஆகியோர் இணைந்து புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர்.
Only Love 🫶🏻 all around 💓 pic.twitter.com/OghjIGO7TR
— Nayanthara✨ (@NayantharaU) December 31, 2024
இந்த இரண்டு ஜோடிகளும் தங்கள் விடுமுறையின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டு, ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அந்த புகைப்படங்கள் இப்பொது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கிடையில், மாதவன் மற்றும் நயன்தாராவும் இணைந்து ஒரு பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
📸 @ActorMadhavan pic.twitter.com/97oFfYdpeI
— Nayanthara✨ (@NayantharaU) December 31, 2024
விக்னேஷ் சிவன்தனது மனைவி நயன்தாராவுக்கு நெற்றியில் முத்தம் கொடுத்து புகைப்படத்தை பதிவிட்டு, எங்கே இது காதல்! மகிழ்ச்சி இருக்கிறது! அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். அன்பில் கவனம் செலுத்துங்கள், வாழ்க்கையில் உள்ள அனைத்து நல்ல விஷயங்களிலும் கவனம் செலுத்துங்கள், கடினமாக உழைப்பதில் கவனம் செலுத்துங்கள். உங்கள் ஆசீர்வாதங்களில் நம்பிக்கை மற்றும் உங்கள் மனசாட்சிக்கு உண்மையாக இருப்பது வெற்றியைத் தருவது மட்டுமல்லாமல், நிறைய திருப்தியையும் ஏராளமான மகிழ்ச்சியையும் தருகிறது.
View this post on Instagram