கேப்டன் விஜயகாந்த் மறைவு வேதனையா இருக்கு! கண்ணீர் விட்ட பேசிய நளினி!

nalini about vijayakanth

கேப்டன் விஜயகாந்தின் மறைவு தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தி இருக்கும் நிலையில், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். சென்னை தீவுத்திடலில் விஜயகாந்தின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்த நிலையில், பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி எழுதினார்கள். குறிப்பாக ரஜினிகாந்த், ராதா ரவி, பார்த்திபன், லிவிங்ஸ்டன், எம்எஸ்பாஸ்கர், மன்சூர் அலிகான், வாகை சந்திரசேகர், பாக்கியராஜ் என பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

அந்த வகையில், விஜயகாந்துடன் பல படங்களில் ஒன்றாக நடித்த நடிகை நளினி விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவிட்டு கண்ணீருடன் பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய நடிகை நளினி ” இன்று விஜயகாந்த் அண்ணனின் மறைவுக்காக இங்கு பலரும் வந்து இருக்கிறீர்கள். இப்போது மட்டும் என்னுடைய விஜயகாந்த் அண்னன் உயிரோடு இருந்திருந்தால் இங்கு இருப்பவர்கள் எல்லாம் பாதுகாப்பாக இருக்கிறீர்களா என்பதை கேட்பார்.

முதலில் நீங்கள் சாப்பிட்டீர்களா சாப்பிட்ட பிறகு மற்ற வேலைகளை எல்லாம் செய்யலாம் என்று சொல்வார். உங்களுடைய எல்லாருடைய பெயரையும் சொல்லி கூப்பிட்டு நல்ல இருக்கீங்களா என்று நலம் விசாரித்து இருப்பார். அதைப்போல, எதாவது கஷ்டம்னா நான் பாத்துக்கிறேனு என்கிட்ட சொல்லு என்று  கேப்டன் சொல்லுவாரு. அப்படி பட்ட ஒரு தூண் கடவுள் கிட்ட போய்ட்டாரு என்று நினைக்கும் போது அதனை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

நேரில் வர முடியவில்லை! தொலைபேசியில் கேப்டன் விஜயகாந்துக்கு இரங்கல் தெரிவித்த அஜித்! 

என்னுடைய அண்ணன் விஜயகாந்த் இறந்த செய்தியை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அண்ணன் விஜயகாந்த் செய்த உதவிகள் கொஞ்ச நஞ்சம் இல்லை அவ்வளவு உதவி செய்து இருக்கிறார். மனதால் என்னை ஒரு தங்கையாக ஏற்றுக்கொண்ட ஒரு நல்ல மனிதர் என்னுடைய அண்ணன். இன்று அவர் நம்முடன் இல்லாதது மிகவும் வேதனை அளிக்கிறது” என நடிகை நளினி வேதனையுடன் பேசியுள்ளார்.

மேலும், சென்னை தீவுத்திடலில் இருந்து மதியம் 2.15 மணியளவில் கேப்டன் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம்  தொடங்கியது. இன்று மாலை 4.45 மணிக்கு 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இறுதி நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்