விஜய் அறிமுகம் செய்த நடிகை சந்நியாசம்! மம்தா குல்கர்னியின் திடீர் மாற்றம்…

ஒரு காலத்தில் பிரபல பாலிவுட் நடிகையாக இருந்த மம்தா குல்கர்னி, தற்போது கினர் அகாராவில் உள்ள மகாமண்டலேஷ்வரராக மாறியுள்ளார்.

Mamta Kulkarni

மும்பை: போதைப்பொருள் மாஃபியாவுடன் திருமணம், மேலாடையின்றி போட்டோஷூட் இப்படி பல சர்ச்சையில் சிக்கிய பிரபல பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி மகா கும்பமேளாவில் சந்நியாசம் (மகாமண்டலேஸ்வரர்) வாங்கி தன் பெயரை `மாய் மம்தா நந்த்கிரி’ என மாற்றி கொண்டுள்ளார்.

இவர், பாலிவுட்டில் நுழைவதற்கு முன், தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். ஆம், விஜய் தயாரிப்பில் அவரின் அம்மா ஷோபா இயக்கத்தில் “நண்பர்கள்” என்ற படம் மூலம் இவர் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகாமண்டலேஸ்வரராக வருபவர் சன்னியாசியாக இருக்க வேண்டும் என்பது அதிகாரங்களின் விதி. இப்படி இருக்கையில், 1993 ஆம் ஆண்டில், நடிகை மம்தா குல்கர்னி ஒரு பத்திரிகைக்காக மேலாடையின்றி போட்டோஷூட் நடத்தினார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை கிளப்பியது.

மேலும், கடந்த 2013-ம் ஆண்டு மம்தா குல்கர்னி இந்தி திரையுலகில் இருந்து விலகி போதைப்பொருள் கடத்தல்காரன் விக்கி கோஸ்வாமியை துபாயில் திருமணம் செய்து கொண்டார். துபாயில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றவர். இதனால், இன்று மம்தா குல்கர்னி சன்னியாசியாக மாறியதைக் கண்டு மக்கள் ஆச்சரியப்படுவதற்கு இதுவே காரணம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்