பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை மால்வி மல்ஹோத்ரா. இவர் தற்போது ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்டபோது தன்னை ஒரு தயாரிப்பாளர் ஏமாற்றிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” நான் பிரபல தயாரிப்பாளரான விக்ரம் பட்டின் பர்பத் கர் தியா ஆல்பம் பாடலுக்காக நான் பணியாற்றினேன். அந்த சமயம் எனக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் வந்துகொண்டு இருந்த காரணத்தாலும் நான் பிசியாக இருந்தேன். இருப்பினும் தயாரிப்பாளர் விக்ரம் பட் தனது தயாரிப்பில் ஒரு பாடலை செய்ய என்னை தொடர்பு கொண்டு பேசினார்.
அப்பாகிட்ட அப்படி கேட்டுருக்க வேண்டாம் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வருத்தம்!
எனக்கு பிஸியான கால அட்டவணை இருந்த போதிலும் அவர் என்னிடம் பேசிய காரணத்தால் சரி என்று சம்மதம் தெரிவித்து அந்த ஆல்பம் பாடலுக்காக நேரம் ஒதிக்கினேன். ஏனென்றால் நான் அவர்களை முழுமையாக நம்பினேன். ஆனால், பண விஷயத்தில் என்னை ஏமாற்றிவிட்டார்கள்.
பாதியில் நடித்துவிட்டு நான் கொடுக்கப்பட்ட பணத்திற்கு பிறகு நிலுவையில் உள்ள பணத்தைக் கேட்டபோது எந்த பதிலும் வரவில்லை. சில மாதங்களுக்குப் பிறகு விக்ரம் பட் மீண்டும் என்னை மீண்டும் அந்த ஆல்பம் பாடலில் பணிபுரியச் சொன்னார். ஆனால் நான் ஒப்புக்கொள்ளவில்லை. ஏனென்றால். ஒரு நடிகையாக, வேறு எந்த நடிகையையும் இப்படி ஏமாந்துவிடக் கூடாது என்பதால் தான் இந்த தகவலை வெளியில் சொல்கிறேன்” எனவும் நடிகை மால்வி மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
சென்னை: இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவான படம் "மதகஜராஜா" திரைப்படம் 12 வருடங்களுக்கு பின்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது…
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் L.B. நகர் கமினேனி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்ட இதயத்தை மருத்துவ பணியாளர்கள் 13 கிலோ…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின்…
நியூ யார்க் : அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் நாள் நெருங்கிவிட்டது என்றே கூறவேண்டும். அதற்கான உறுதி…