நடிகை மாளவிகா மோகனன் தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் வெளியான திரைப்படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில், அவருக்கு தங்கையாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்தார்.
இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக மாறினார். இதனை அடுத்து சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும், அந்த திரைப்படங்கள் அவ்வளவாக பேசப்படவில்லை. இப்போது நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி வரும், தங்கலான் திரைப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இதற்கு இடையில் அவ்வப்போது கவர்ச்சியான உடை அணிந்து, புகைபடமெடுத்து அதனை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இதுவரை இல்லாத அளவிற்கு தனது உடல் தெரியும்படி கவர்ச்சி காட்டிப் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.
அதைத்தொடர்ந்து, தற்போது ரோஸ் மற்றும் சிவப்பு என இரட்டை நிற பட்டுப் புடவையில், அணிந்து அம்சமான புகைப்படங்களை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் மாளவிகா மோகனன்-ஐ அழகு சிலை, அழகு ராணி என்று வர்ணித்து வருகின்றனர்.
மேலும், விக்ரமுக்கு ஜோடியாக இவர் நடித்துள்ள தங்கலான் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கு முன்னதாக இந்த திரைப்படத்திற்கான ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்,…
டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…
சென்னை : இன்றயை காலகட்டத்தில் நாம் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக யூடியூப் உள்ளது. இதில் பொழுதுபோக்குக்காகவும், சில முக்கிய…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…
டெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கு இடையே உள்ளஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான…
சென்னை : அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும்…