மாளவிகா மேனன் : மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை மாளவிகா மேனன். இவர் தமிழ் சினிமாவில் இவான் வேறமாதிரி, விழா, பிரம்மன், வெத்து வேட்டு, நிஜமா நிழலை, பேய் மாமா உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களிலும் நடித்தவர். தமிழில் பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் மலையாளத்தில் படங்களில் நடித்து வருகிறார்.
அந்தவகையில், இவர் சமீபத்தில் நடித்த சமீபத்திய மலையாளப் படங்கள் ‘தங்கமணி, ஒன்ஸ் அபான் எ டைம் இன் கொச்சி’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனையடுத்து, சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த மாளவிகா மேனன் கதைக்கு தேவை என்றால் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிப்பேன் என நடிகை மாளவிகா மேனன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” என்னுடைய முதல் மலையாள படம் ‘நித்ரா’ (2011). அதில் ஹீரோவின் தங்கையாக நடித்தேன். அப்போது அந்த படத்தில் நடிக்கும்போது என்னுடைய வயது 14 வயது. அதன்பிறகு, ‘916’ (2012) என்ற மலையாளப் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானேன். இதனை வருடங்களில் நான் சினிமாவில் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டு இருக்கிறேன்.
எனக்கு கிளாமர் கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை இருக்கிறது. ஆனால், மலையாள படங்களில் கிளாமர் ரோல்களுக்கு வாய்ப்பு இல்லை. தெலுங்கு, தமிழ் மொழிகளில் அந்த வாய்ப்புகள் நன்றாகவே இருக்கிறது. இந்த இரண்டு மொழிகளிலும் கிளாமரான ஹீரோயினாக நடிக்க ஸ்கோப் இருக்கிறது. வாய்ப்பு கிடைத்து கதைக்கு தேவை என்றால் யோசிக்காமல் நான் அப்படி நடிப்பேன்” எனவும் நடிகை மாளவிகா மேனன் கூறியுள்ளார்.
சென்னை : தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக உள்ள நயன்தரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 2022ஆம்…
நியூ யார்க் : குல்தீப் குமார் எனும் 35 வயது மதிக்கத்தக்க நபர் அமெரிக்காவில் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த…
டெல்லி : அடுத்த மாதம் (பிப்ரவரி) தலைநகர் டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பரப்புரை வேலைகளை…
கர்நாடகா: சினாவில் பரவி வரும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சளி, இருமல், தொண்டை எரிச்சல்,…
சென்னை : சீனாவில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாதிக்கும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.…
சென்னை: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் "குட் பேட் அக்லி" திரைப்படம் ஏப்ரல் 10…