டாடா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கவினுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது என்றே கூறலாம். இவர் இதற்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதும் அவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் இருந்தது என்றே கூறலாம். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோது இவருக்கும் லாஸ்லியாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று தான்.
பிறகு தனிப்பட்ட சில கரணங்கள் இருவரும் பிரிந்துவிட்டனர். அதனை தொடர்ந்து நடிகர் கவின் வேறொரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில், பேட்டி ஒன்றில் பேசிய நடிகை லாஸ்லியா கவின் திருமணம் பற்றியும் அவருடைய வளர்ச்சியை பற்றியும் மனம் திறந்து பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் ” கவினுக்கு திருமணம் முடிந்துள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
அதைப்போல அவர் தொடர்ச்சியாக நல்ல படங்களில் நடித்து வருவதை பார்க்கும்போது இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ச்சியாக வெற்றி படங்களில் நடித்து அவர் முன்னணி நடிகராக வளர்ந்து வருவதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு சிலர் முன்பு நடந்த விஷயங்களை வைத்து சேர்த்து வைத்து பேசிக்கொண்டு தான் இருப்பார்கள்.
அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை அவர்களுக்கு எல்லாம் பதில் சொல்லிக்கொண்டு இருக்கவேண்டும் என்கிற அவசியமும் இல்லை. கிட்டத்தட்ட 4 வருடங்கள் ஆகிவிட்டது இன்னும் பழசை போட்டு இப்போது இருக்கும் வாழ்க்கையுடன் சேர்த்து பேசுவது என்னை இதுவரை பாதிக்கவில்லை அவரையும் அது பாதித்திருக்காது என்று நான் நம்புகிறேன்.
எனக்கு இதை பற்றி எந்த கவலையும் இல்லை அவர் சந்தோசமாக இருக்கிறார் நானும் சந்தோசமாக இருக்கிறேன்” எனவும் நடிகை லாஸ்லியா தெரிவித்துள்ளார். மேலும், நடிகர் கவின் மோனிகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் கொண்டார். இவர் கவினுடன் பள்ளியில் ஒன்றாக படித்தவராம். இருவரும் சில ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக…
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…