அந்த காரணத்துக்காக தற்கொலைக்கு முயன்றேன்! கிருத்திகா அண்ணாமலை வேதனை!

krithika annamalai

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மெட்டி ஒலி’ சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் நடிகை கிருத்திகா அண்ணாமலை. இவர் வில்லத்தனமான வேடங்கள் கொடுத்தாலும் அதில் எந்த அளவிற்கு நடிக்க முடியுமோ அதே அளவிற்கு நடித்து கொடுத்துவிடுவார். இவர் தற்போது சில சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்டபோது தன்னுடைய விவாகரத்து பற்றியும் அதனால் தாங்க முடியாத வேதனையால் தற்கொலை செய்யும் அளவிற்கு சென்றதாகவும் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” எனது திருமண வாழ்க்கையில் நான் பட்ட கஷ்டங்களை எல்லாம் சாதாரணமாக சொல்லிவிட முடியாது. அந்த அளவிற்கு பல பிரச்சனைகள் இருக்கிறது.

அட்லீயை எல்லோரும் கொண்டாடனும்! உருக்கமாக பேசிய சிவகார்த்திகேயன்!

எனக்கு திருமணம் முடிந்த பிறகு சரியாக 10 மாதங்களில் குழந்தை பிறந்தது. அந்த சமயம் என்னுடைய கைகளில் மூன்று சீரியல்களும் இருந்தது. குழந்தையை பார்த்துக் கொள்ளவேண்டும் என்ற காரணத்தால் சீரியல்களை விட்டுவிட்டு வீட்டில் இருந்தேன். வீட்டில் இருந்த நாளில் இருந்து எனக்கும் என்னுடைய கணவருக்கும் பயங்கரமாக சண்டை நடந்தது. எங்களுடைய இருவருக்கும் இடையே தகராறு தொடங்கியது.

பின்னர் அவர் செய்யும் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மீண்டும் சீரியல் நடிக்க ஆரம்பித்தேன். ஆனால், அதெல்லாம் பார்த்துக்கொண்டு கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாமல் வீட்டிலே அவர் இருந்தார். எனவே, இதனை வைத்து எங்கள் இருவருக்கும் இடையே சண்டை பெரிதாக வெடித்தது. இந்த சித்ரவதை தாங்க முடியாமல் தற்கொலைக்கு முயற்சி செய்தேன்.

அந்த அளவிற்கு மிகவும் வேதனையாக அந்த சமயம் இருந்தது. குழந்தை பிறந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு இது நடந்தது. இந்த பிரச்சனைகள் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் எல்லாத்தையும் மறைந்து நான் மீண்டும் அவருடன் இருக்க விரும்பினேன்.நாலு வருஷம் அவரோட இருக்கேன். அதன்பிறகு அவரைத் தாங்கும் பொறுமையை இழந்து அவரை விவாகரத்து செய்தேன்” எனவும் நடிகை கிருத்திகா அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Joe Root
erode by election 2025
edappadi palanisamy mk stalin
R Ashwin -- Virat kohli
abhishek sharma varun chakravarthy
vidaamuyarchi anirudh