kiran rathod ghilli [file image]
நடிகர் விஜய்க்கு முதன் முதலாக 50 கோடி வசூல் கொடுத்து குடும்ப ரசிகர்களை கொண்டு வந்த திரைப்படம் என்றால் கில்லி தான். அதைபோலவே, இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து இருந்த நடிகை த்ரிஷாவுக்கும் இந்த கில்லி படம் மார்க்கெட்டை உயர்த்தி கொடுத்தது என்றே சொல்லலாம். இந்த படத்தில் அவர் நடித்திருந்த தனலட்சுமி கதாபாத்திரத்திற்கு இப்போது வரை ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.
இந்த திரைப்படத்தில் முதன் முதலாக விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருந்தது நடிகை த்ரிஷா இல்லயாம். முதன் முதலாக வேறொரு நடிகை தான் நடிக்க இருந்தாராம். அந்த நடிகை வேறு யாரும் இல்லை 90 ஸ் காலட்டத்தில் ட்ரென்டிங் நடிகையாக வளம் வந்த நடிகை கிரண் தான். இவரிடம் தான் முதன் முதலாக கில்லி படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றதாம்.
ஆனால், அந்த சமயம் இந்த படத்தின் மீது நடிகை கிரண் பெரிய அளவில் ஆர்வம் காட்டாமல் படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்துவிட்டாராம். இந்த தகவலை கிரண் சமீபத்திய பேட்டி ஒன்றில் வேதனையுடன் தெரிவித்து இருக்கிறார். கிரண் நடிக்க மறுத்த பிறகு தான் படத்தின் கதையை இயக்குனர் த்ரிஷாவிடம் கூறி அவருக்கு கதை ரொம்பவே பிடித்து போக உடனடியாக படத்தில் நடிக்கவும் சம்மதம் தெரிவித்துவிட்டாராம்.
கிரண் கில்லி படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க மறுத்துள்ள தகவலை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு பெரிய வாய்ப்பை இப்படி மிஸ் பண்ணிடீங்களே மேடம் என்று கூறி வருகிறார்கள். மேலும், கில்லி படம் கடந்த ஏப்ரல் 20 -ஆம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கேரளா : மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியில், புதிய பாலத்தின் மேல் நின்று ஒரு இளைஞர் ஆத்மஹத்யா செய்து…
கேம்பிரிட்ஜ் : பூமியிலிருந்து 124 ஒளியாண்டுகள் தொலைவில், உள்ள K2-18 K2-18b எனப்படும் புறக்கோள் குறுமீனைச் சுற்றி வருகிறது. கடந்த…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…